Sunday, 30 July 2017

40. Rahasya yogini

Verse 40
Vasukona nivaasinyo yaastaa: sandhyaarunaa vasinyaadhyaa:
Puryashtakamevedam chakratano: samvidaatmano devyaa:

“Those that abide in the chakra of eight triangles are Vasini and others who are red like the evening sun.  This is the eight-fold subtle body (sookshma sarira, puri ashtaka) of the Devi which is the chakra and the Self is the Supreme experience (samvidh).”

Commentary:
The chakra of eight triangles is called sarva rogahara (all diseases destroyer).  The eight Sakthis called rahasya yogini.  They are Vasini (one who attracts everything), Kameswari (mistress of lust), Modini (she who is happy), Vimala (blemishless), Aruna (red in color), Jayini (always victorious), Sarveswari (mistress of all) and Kaulini (mistress of kula achara).

Devi is the supreme experience, samvid.  Her form is knowledge itself. 
The eight triangles form the subtle body or sookshma sarira of Devi.  The Puri ashtaka are karmendriya, jnanendriya, manas, prana, elements, kama, karma and tamas- according to Bhaskararaya’s commentary on Nitya sodashika.  (160-164).

வசுகோண நிவாஸின்யௌ யாஸ்தா: சந்த்யா(அ)ருணா வசின்யாத்யா
புர்யஷ்டகமேவேதம் சக்ரதனோ: சம்வித் ஆத்மனோ தேவ்யா:
தேவி உச்ச உணர்வு, சம்வித். அவளது உருவம் ஞானம்.

“எட்டு கோணங்களில் இருப்பவர்களான வசினி முதலியவர்கள் சந்தியா கால அருணம் போன்ற நிறத்தையுடையவர்கள்.  இது தேவியின் புரியஷ்டகமான சூட்சும சரீரம்.  அதுவே சக்கரமாக இருக்கிறது. அங்கு ஆத்மா உச்ச உணர்வாக, சம்வித்தாக இருக்கிறது.”

எட்டு கோணங்களைக் கொண்ட சக்கரம் சர்வ ரோகஹரா (எல்லா வியாதிகளையும் தீர்ப்பது) என்று அழைக்கப்படுகிறது.  அதில் இருக்கும் சக்தி ரகசிய யோகினி.  அவர்கள் வசினி (அனைத்தையும் கவர்பவள்), காமேஸ்வரி (காமத்துக்கு அதிபதி), மோதினி (மகிழ்ச்சியாக இருப்பவள்), விமலா (குற்றமற்றவள்), அருணா (சிவந்த நிறத்தையுடையவள்), ஜெயினி (எப்போதும் வெற்றியையுடையவள்), சர்வேச்வரி (அனைத்துக்கும் அதிபதி) மற்றும் கௌலினி (குலத்துக்கு அதிபதி).


எட்டு கோணங்களையுடைய சக்கரம் அவளது புரியஷ்டகமான சூட்சும சரீரம். நித்ய சோடஷிகா என்னும் நூல் தேவியின் புரியஷ்டகம் என்பது கர்மேந்த்ரியம், ஞாநேந்த்ரியம், மனஸ், பிராணன், பஞ்ச பூதங்கள், காமம், கர்மம் மற்றும் தமஸ் என்று பாஸ்கரராயரின் விளக்கவுரை கூறுகிறது.

Thursday, 27 July 2017

39. Kameshvari and Mithreshvara

Verse 39
Tanmithunam gunabedhaadaaste bindu trayaatmake tryasre
Kaameshee mitresha pramukhadvandvatryaatmanaa vitatam

“That couple (Kamesvara and Tripura Sundari) are in the triangle which is constituted by the three bindus.  Due to distinctions in qualities (guna bedham) she assumes the form of three other couples the first of which is Kameshi-Mitresha.

Commentary:
That couple (tan mithunam)- the Supreme Spirit divides itself into female and male and enjoys as a couple (mithuna rupena viharati). Bruhadaaranyaka Upanishad says 
“He verily did not enjoy because one cannot enjoy”.

Rahasya agama says Paramasiva who is the paired or united Prakasha and vimarsha brought down all the tantras. 

The couple who are united, Kama and Kameshvari assume the forms of the three pairs Mitresha natha- Kameshvari, Uddisha natha-vajreshvari and sashthisha natha-Bhagamalini as the three pairs of the Divya, Siddha and Maanava lines (of gurus).

தன்மிதுனம் குண பேதாதாஸ்தே பிந்துத்ரயாத்மகே
காமேஷீமித்ரேஷ பிரமுகத்வந்த்வ த்ரயாத்மனா விததம்

“அவர்கள் இருவரும் (காமேஸ்வரன் த்ரிபுர சுந்தரீ) மூன்று பிந்துக்களால் ஆன முக்கோணத்தில் இருக்கிறார்கள். குண வேறுபாடுகளால் அவள் மூன்று ஜோடிகளாக உருவெடுக்கிறாள். அவற்றில் முதலாவது காமேஷீ-மித்ரேஷன்”

விளக்கவுரை:
அந்த ஜோடி (தன் மிதுனம்)- அந்த பரமாத்மா தன்னை ஆண் பெண் என்று இரண்டாக பிரித்துக்கொண்டு தன்னை அனுபவிக்கிறது (மிதுன ரூபேண விஹரதி). “ஒன்றாக இருக்கும்போது அனுபவிக்க முடியாது” என்று பிருகதாரண்யக உபநிஷத் கூறுகிறது.

ஒன்றாக இணைந்த பிரகாச விமர்சங்கள், பரமசிவன் எல்லா தந்திரங்களையும் வெளிப்படுத்தினார் என்று ரகசிய ஆகமம் கூறுகிறது.


காம காமேஷ்வரிகள் மூன்று ஜோடிகளாக, மித்ரேஷநாதர்- காமேஸ்வரி, உத்திஷ நாதர்- வஜ்ரேஸ்வரி மற்றும் சஷ்திஷநாதர்- பகமாலினி என்று முறையே திவ்யர், சித்தர் மற்றும் மானவர்களின் குருக்களாக விளங்குகின்றனர்.

Monday, 24 July 2017

37, 38- Kameswara and Tripura Sundari



Image result for kameswara and devi

Verse 37, 38
Aaseenaa bindumaye chakre saa tripurasundarii devii
Kaamesvaraanka nilayaa kalayaa chandrasya kalpitottamsaa

Paasha ankusekshu caapa prasoona: sharapanchaka ancitasvakaraa
Baalaarunaarunaangi shashibhaanu krishaanulochanatritayaa

 “She, Devi Tripurasundari abides in the bindu maya chakra.  There she is seated in the lap of Kamesavara, a digit (kala) of the moon is placed by her as an adornment on her forehead.  She holds in her hands the noose, the goad, the sugarcane bow and the five flower arrows.  She is red like the rising sun.  The moon, the sun and the fire are her three eyes.”

Commentary:
Bindu-maya chakram- this is called sarvanandamaya chakram or chakra of all bliss.  This is also called paramakasha.  Bhairava Yamala says she is seated on the left lap of Kamesvara.  The kala or digit of the moon represents the life of the universe, time.  By saying that it is placed it is shown that the Chandra mandala is an accessory (upakarana) for Devi’s enjoyment.

Noose- represents iccha sakti, it is the bondage that causes distinction between individual self and supreme self.
Goad- ankuksha- represents jnana sakthi. The distinction is destroyed by the goad. 
The sugarcane bow and five flower arrows- represent kriya sakthi, which is the cause of attachment to things outside of one’s self.  All these show that the iccha, jnana and kriya sakti are within Devi’s control.

ஆசீனா பிந்து மத்யே சக்ரே ஸா த்ரிபுர சுந்தரீ தேவீ
காமேச்வராங்க நிலயா கலயா சந்த்ரஸ்ய கல்பிதோத்தம்சா

பாசாங்குசேக்ஷு சாப ப்ரசூன: சரபஞ்சகாஞ்சிதஸ்வகரா
பாலாருணாருணாங்கி சசிபானு க்ருஷானுலோசசனத்ரிதயா

"அவள் தேவி, த்ரிபுர சுந்தரீ பிந்து மத்ய சக்கரத்தில் காமேச்வரனின் மடியில் அமர்ந்திருக்கிறாள். அவளது நெற்றியில் சந்திரனின் ஒரு கலை வைக்கப்பட்டிருக்கிறது.  அவளது கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், ஐந்து மலரம்புகள் ஆகியவை இருக்கின்றன.  அவள் உதிக்கும் சூரியனின் நிறத்தில் இருக்கிறாள்.  சந்திரன், சூரியன் மற்றும் அக்னி அவளது மூன்று கண்களாக இருக்கின்றன.”

பிந்து மத்ய சக்கரம் சர்வானந்தமய சக்கரம் அல்லது எல்லா ஆனந்தங்களையும் கொண்டது என்று பொருள்படும் சக்கரமாகும்.  அது பரமாகாசம் என்றும் அழைக்கப்படுகிறது. பைரவி யாமளம், “தேவி காமேச்வரனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள்,” என்கிறது.  சந்திரனின் கலை பிரபஞ்சத்தின் வாழ்க்கையை, காலத்தைக் குறிக்கிறது.  அது தேவியின் நெற்றில் உள்ளது என்று கூறுவது அதுவும் தேவியின் ஆனந்தத்துக்கு ஒரு உபகரணமாகும் என்று பொருள்.

பாசம் இச்சா சக்தியைக் குறிக்கிறது.  அது ஜீவனுக்கும் ஈஸ்வருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
அங்குசம் ஞான சக்தியைக் குறிக்கிறது. அந்த சக்தியினால் மேற்கூறிய வித்தியாசம் தவிர்க்கப்படுகிறது
கரும்பு வில்லும் மலரம்புகளும் கிரியா சக்தியைக் குறிக்கின்றன.  அவை ஜீவனை விட்டு வேறான பொருள்களில் அதற்கு இருக்கும் பற்றைக் குறிக்கிறது.  இவ்வாறு இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய அனைத்தும் தேவியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.


Sunday, 23 July 2017

36. Aavarana Devata

Verse 36
Seyam paraa maheshi chakraakaarena parinamete yadaa
Tad deha avayavaanaam parinatiraavaranadevataa: sarvaa:

When she, the all-excelling Great Queen, changes into the form of chakra then her limbs of her body change into aavarana devatas (deities in the precincts).

Commentary:
Devi’s body is a mass of light.  Her limbs are the rays. The aavarana devata are countless Saktis who appear and disappear like bubbles in the ocean.

“சேயம் பரா மஹேஷி சக்ராகாரேண பரிணமேதே யதா
தத் தேஹ அவயவானாம் பரிணதிர்ஆவரண தேவதா: சர்வா:

“மகாராணியான அவள் சக்ர உருவை எடுத்துக்கொள்ளும்போது அவளது உடல் ஆவரண தேவதைகளாகிறது.”

விளக்கவுரை:

தேவியின் உடல் ஒளியாலானது.  அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அவளது அவயவங்கள்.  அந்தக் கதிர்கள் ஆவரண தேவதைகள்.  இவ்வாறு எண்ணற்ற சக்திகள் கடலிலிருந்து வெளிப்படும் நீர்க்குமிழிகளைப் போல தேவியின் உடலிலிருந்து தோன்றி மறைகின்றனர்.

Saturday, 22 July 2017

35. Time and lives

Verse 35
Kramanam padavikshepa: kramodayastena kathyate dvedhaa
Aavaranam gurupankthir dvayamidam ambaa padaambuja prasara:

“the movement is either step by step in a defined direction (pada vikshepam) or gradual expansion in all directions (kramodayam) and is therefore said to be of two kinds, the saktis who surround her and the line of gurus.  These two are the movements of the lotus feet of the mother.”

Commentary:
This verse talks about the group of Saktis who surround Maha Tripurasundari and the guru mandalam.

Kramanam means walking.  This is of the two types, pada vikshepam or kramodayam.  Pada vikshepam indicates Devi’s power to create countless sakthi who are her rays. 

Bhairava Yamala says “In the bindu united with Sadasiva, Maheswari creates, maintains and withdraws the worlds and is beyond the tattva.  She is light and transcendent.  From her body emanate counless rays. Out of these 360 spread in the brahmanda as moon, sun and fire. Fire has 108, sun 116 and moon 136 rays.  These illuminate the macrocosm and the microcosm.  The sun illuminates the day, the moon the night and the fire the twilight.  Thus is time divided and these three are time (kaalaatmika traya).  360 days make a year and Mahadeva who is Prajapati is the year (Hayanaatma) (Taitiriya Brahmana 1.6.2).

Kramodaya means going forth of Devi as guru-mandalam consisting of Divya, Siddha and Maanava groups whose number is endless.  They are illuminated by her light.

க்ரமணம் பதவிக்சேப: க்ரமோதயஸ்தேன கத்யதே த்வேதா
ஆவரணம் குரு பங்க்திர் த்வயமிதம் அம்பா பதாம்புஜ ப்ரசர:

“அசைவு, ஒவ்வொரு அடியாகவோ (பத விக்ஷேபம்) எல்லா திசைகளிலும் ஒன்றுபோலவோ (க்ரமோதயம்) நடைபெறுவதால் அவை தேவியைச் சூழ்ந்துள்ள சக்திகள் மற்றும் குருமண்டலம் என்று அழைக்கப்படுகின்றன.  இவையிரண்டும் தேவியின் தாமரைப் பாதங்களின் நடையே.”

விளக்கவுரை:
இப்பாடல், மகாத்ரிபுர சுந்தரியைச் சூழ்ந்துள்ள சக்திகளையும் குரு மண்டலத்தையும் விளக்குகிறது.

க்ரமணம் என்றால் நடை என்று பொருள்.  இந்த நடை அடியடியாகவோ (பத விக்ஷேபம்) எல்லா திசைகளிலும் ஒரே அளவில் ஏற்படும் விரிவாகவோ(க்ரமோதயம்) நடைபெறுகிறது. எண்ணற்ற சக்திகளைப் படைக்கக்கூடிய தேவியின் திறத்தை பத விக்ஷேபம் குறிக்கிறது. பைரவ யாமளம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“பிந்துவில் சதாசிவனுடன் கலந்திருக்கும் மகேஸ்வரி உலகைப் படைத்து, காத்து, தன்னுள் லயிக்கச் செய்கிறாள். அவள் தத்துவங்களைக் கடந்தவள். அவளே ஒளி, அவளே அனைத்தையும் கடந்தவள். அவளது உடலிலிருந்து எண்ணற்ற ஒளிக்கற்றைகள் வெளிப்படுகின்றன. அவற்றில் 360 பிரம்மாண்டம் எனப்படும் இந்தப் பிரம்மாண்டத்தை ஒளியூட்டுகின்றன.  அவையே சந்திரன், சூரியன், அக்னி என்று அழைக்கப்படுகின்றன.  அவை அண்டத்தையும் பிண்டத்தையும் ஒளியூட்டுகின்றன.  அவற்றில் அக்னி 108 கதிர்களையும் சூரியன் 116 கதிர்களையும் சந்திரன் 136 கதிர்களையும் கொண்டுள்ளன. சூரியன் பகலையும் சந்திரன் இரவையும் அக்னி சந்தியா காலத்தையும் ஒளியூட்டி காலமாக இருக்கின்றன. 


360 நாட்கள் ஒரு வருடமாகவும் மகாதேவனான பசுபதி வருடமாகவும் இருக்கிறார் (தைத்திரிய ஆரண்யகம் 1.6.2).

க்ரமோதயம் என்றால் திவ்யர்கள், சித்தர்கள், மானவர்கள் என்று எண்ணற்றவர்களைக் கொண்ட குரு மண்டலமாக தேவி வெளிப்படுவது.  அவர்கள் அனைவரும் அவளது ஒளியே.

Friday, 21 July 2017

34. The three circles- Bhupuram

Verse 34
Bindhu trayamaya teja: tritayavikaarascha taani vruttaani
Bhoobimbatrayam etat pashyanti aadi trimaatru vishraanthi:

“The three circles are the transformations of the effulgence of the three bindhus.  These are the three circles in the bhupuram.  The three mothers including Pashyanthi rest here.”

Commentary:
Now the author talks about the three circles that are present outside the lotus petals.  He says that the circles are the lights emanating from the three bindhus.  These three lights are the moon, sun and fire.  The three saktis, pashyanthi, madhyama and vaikhari are upto this place luminous.  They function from the trikona upto this bhupura. They abide the sakhtis, Anima and others, Brahmi and others, and sarva sankshobhini and others.

பிந்து த்ரயமயதேஜ: த்ரிதயவிகாரஸ்ச தானி வ்ருத்தானி
பூபிம்பத்ரயம் ஏதத் பஷ்யந்தி ஆதி த்ரி மாத்ரு விஸ்ராந்தி:

“ மூன்று பிந்துக்களின் ஒளியே மூன்று வட்டங்கள்.  அவை பூபுரத்தின் மூன்று வட்டங்கள்.  பஷ்யந்தி முதலிய மூன்று மாதாக்கள் அங்கு ஓய்வெடுக்கின்றனர்.”

விளக்கவுரை:

எட்டு மற்றும் பதினாறு தாமரை இதழ்களை அடுத்து உள்ள மூன்று வட்டங்களைப் பற்றி இப்பாடல் பேசுகிறது.  இந்த மூன்று வட்டங்கள் மூன்று பிந்துக்களின் ஒளியாகும்.  இதனால் இவை சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கின்றன.  இவ்வாறு பஷ்யந்தி மத்யமா மற்றும் வைகரீ சக்திகள் த்ரிகோணத்திலிருந்து பூபுரம் வரை ஒளிபடைத்து செயல்படுகின்றன.  அவை அணிமா முதனான சக்திகளையும் பிராம்மி முதலான சக்திகளையும் சர்வ சங்க்ஷோபிணி முதலிய சக்திகளையும் உள்ளடக்கி விளங்குகின்றன.

33. Lotus petals

Verse 33
Kaadibhi: ashtabhirupa chitam ashtadalaabjam ca vaikharee vargai:
Svara gana samuditam etat dvyastadala ambhoruham ca sanchintyam

“The eight groups of letters beginning with the ka group which are vaikhari sakthi are on the petals of the lotus of eight petals and it should always be born in mind (meditated upon) that the lotus of sixteen petals has on its petals the vowel letters.”

Commentary:
The sarva sankshobhana chakram and sarvaasaa paripooraka chakram are described here with the letters that are present there.

The eight groups of letters are the ka varga, cha varga etc we saw before. 
The vowels are present on the sixteen petals. 

காதிபி: அஷ்டபிரூப சிதம் அஷ்டதளாப்ஜம் ச வைகரீ வர்கை:
ஸ்வர கண சமுதிதம் ஏதத் த்வியஷ்டதள அம்போருஹம் ச சந்சிந்த்யம்

“வைகரீ சகதியான க வர்க்கம் முதலான எட்டு எழுத்து வர்க்கங்கள் எட்டு இதழ்களையுடைய தாமரை இதழ்களிலும் பதினாறு இதழ்களையுடைய தாமரை இதழ்களில் பதினாறு உயிரெழுத்துக்கள் உள்ளன என்று தியானிக்க வேண்டும்.”


விளக்கவுரை: 
சர்வ சங்க்ஷோபன சக்கரம் மற்றும் சர்வ ஆசாபரிபூரக சக்கரம் ஆகியவை இங்கு விளக்கப்படுகின்றன. 

32. Vaikhari

Verse 32
Parayaa pashyanthi api madhyamayaa sthoola varna roopinyaa
Ethaabhi: eka panchaashath aksharaatmikaa vaikhari jaathaa.

“Para, pashyanthi and madhyama are her gross forms.  By these three is produced vaikhari who is the fifty-one letter of the alphabet.”

Commentary:
Vaikhari, consisting of the fifty one letters starting from a and ending in ksha, is the grossest form that results in the manifested universe.
Para is the energy, pashyanthi is the subtle form, madhyama is both subtle as well as gross form and vaikhari is completely the gross form.

பராயா பஷ்யந்தி அபி மத்யமயா ஸ்தூல வர்ண ரூபிண்யா
ஏதாபி: ஏக பஞ்சாசத் அக்ஷராத்மிகா வைகரி ஜாதா

“பரா, பஷ்யந்தி மற்றும் மத்யமா, அவளது ஸ்தூல ரூபங்கள்.  இவை மூன்றிலிருந்தும் ஐம்பத்தொரு எழுத்துக்களைக் கொண்ட வைகரி பிறக்கிறது.”

விளக்கவுரை:
அ முதல் க்ஷ வரை உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களைக் கொண்டது வைகரி. அதுவே வெளிப்பாடுடைய உலகமாகப் பரிமளிக்கிறது. 

சப்தத்தின் நான்கு நிலைகளைப் பார்த்தால் பரா என்பது சக்தி நிலை, பஷ்யந்தி சூட்சும நிலை, மத்யமா சூட்சும மற்றும் ஸ்தூல நிலை, வைகரி ஸ்தூல நிலை மட்டுமே.  

Tuesday, 18 July 2017

31. Sarva saubhagya dhaayaka chakram

Verse 31
Etaccakra chatushka prabhaasa metam dashaara parinaama:
aadisvaragaNagata- catur-dashaavarNa mayam chaturdashaaram abhoot

“The light of the first four chakras is the fully evolved chakra of ten triangles.  Then appeared the chakra of fourteen triangles that contains the fourteen vowels beginning with A.”

Commentary:
The four chakras are bindu, trikona, eight triangled and inner ten triangled chakras.  The outer chakra of ten triangles is described as fully evolved. 
The fourteen triangled chakra contains the fourteen vowels that begin with “a”.  This chakra is called sarva saubhagya daayaka.

ஏதக்சக்ர சதுஷ்க பிரபாஸ மேதம் தசார பரிணாம:
ஆடிஸ்வரகணகத சதுர் தசாவர்ணமயம் சதுர்தசாரம் அபூத்

பத்து கோணங்களைக் கொண்ட, பூரண வெளிப்பாடுடைய சக்கரம் முந்தைய நான்கு சக்கரங்களின் ஒளியாகும். இதன் பிறகு பதினான்கு கோணங்களைக் கொண்ட, அகாரம் முதலான உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் தோன்றுகிறது.”

விளக்கவுரை:

இப்பாடலில் குறிப்பிடப்பட்ட நான்கு சக்கரங்கள், பிந்து, முக்கோணம், எட்டு கோண சக்கரம், உள் பத்து கோணச் சக்கரம் என்பவை.  பூரண வெளிப்பாடுடைய சக்கரம் வெளி பத்து கோண சக்கரம்.  பதினான்கு கோணங்களைக் கொண்ட, உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் சர்வ ஸௌபாக்யதாயக சக்கரம் எனப்படும்.

Tuesday, 11 July 2017

29, 30 All the letters

Verse 29,30
Saśapavargamayam tadvasukonam madhya kona vistaara:
Navakonam madhyam cetyasmimshichiddeepadeepite dasake
Tacchaayaa dvitayamidam dashaara chakra dvayaatmanaav itatam
Tadacakavarga catushtaya vilasanavispashtakona vistaaram


“The chakra of eight triangles consisting the letters sa,śa, sha and the pa varga is an expansion of the middle triangle.  These nine triangles together with the bindu make the ten which are lighted by the light of chith (chith deepa).  The two lights of these ten are spread forth as two chakras of ten triangles each of which the inner ten triangles display the tha varga and the ta varga and the outer ten trianges display the cha varga and ka varga.”

Commentary:
This verse talks about the emergence of the vaikari sakthi in terms of the triangles that emerge from the light and energy of the middle triangle.
The chakra of eight triangles called the sarva roga hara (destroyer of all diseases) contains the eight letters, sa, śa, sha and the pa varga.  This is the expansion of the middle triangle.  Thus there are totally nine triangles and when the bindu is included it becomes ten.  This group is illuminated by the light of chith, the light of consciousness, the rays that surround Tripura the mother seated at the bhindu chakra.  She is light herself.  The two lights are the fire of dissolution (samvarta anala) and chith kala.  The samvarta anala is the fire of pralaya, the all devouring Kaalaagni Rudra.  Chith kala is Tripura.

The two lights of fire and chith kala spread as the two chakras of ten triangles each.  They are called sarva rakshaakara (all protector) and savartha saadhaka (all accomplisher).  The inner triangle has the tha and ta varga while the outer triangles have the cha and ka varga.

ஸசப வர்கமயம் தத்வசுகோணம் மத்ய கோணவிஸ்தார:
நவகோணம் மத்யம் சேத்யஸ்மிம்ச் சித் தீப தீபிதே தசகே
தத் சாயா த்விதயமிதம் தசார சக்ர த்வயாத்மனாவ இததம்
தடசக வர்க்க சதுஷ்டய விலசனவிஸ்பஷ்டகோண விஸ்தார்ணம்

எட்டு கோணங்களைக் கொண்ட, ஸ,ச,ஷ மற்றும் ப வர்க்கம் எழுத்துக்களைக் கொண்ட கோணம் மத்திய கோணத்தின் விரிவு ஆகும்.  இவ்வாறு மத்திய கோணத்தையும் சேர்த்து ஒன்பது கோணங்களும், பிந்துவுடன் சேர்த்து பத்து கோணங்களாகவும் இருக்கும் இது சித்தின் தீபத்தினால் ஒளியூட்டப்படுகிறது.  இந்த பத்து கோணங்களின் இரு ஒளிகள் இரண்டு பத்து கோணங்களாக விரிவடைகின்றன.  அவற்றில் உள்பத்துக்கோணம் ட மற்றும் த வர்க்கத்தையும் வெளியிலுள்ள பத்துக் கோணங்கள் ச மற்றும் க வர்க்க எழுத்துக்களையும் கொண்டுள்ளன.”

விளக்கவுரை:
இப்பாடல் கோணங்களாக எழும் வைகரி சக்தியின் தோற்றத்தைப் பேசுகிறது.  இது மத்திய முக்கோணத்தின் ஒளி மற்றும் சக்தியிலிருந்து தோன்றுகிறது.
எட்டு கோணங்களைக் கொண்ட உருவம் சர்வ ரோக ஹரா எனப்படுகிறது.  இது ஸ, ச, ஷ மற்றும் ப வர்க்க எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது மத்திய முக்கோணத்தின் விரிவு.  இவ்வாறு மத்திய கோணத்தைச் சேர்த்து ஒன்பது கோணங்களும் பிந்துவையும் சேர்த்து பத்து கோணங்களையும் உடைய உருவம் உள்ளது.  இது சித்தின் ஒளியால் ஒளியூட்டப்படுகிறது.  இந்த ஒளிக் கதிர்கள் பிந்துவில் அமர்ந்திருக்கும் திரிபுராவைச் சூழ்ந்திருக்கும் ஒளியாகும்.  அவளே ஒளியாவாள்.  இரு ஒளிகள் என்பது பிரளய காலத் தீ மற்றும் சித் கலா.  இவற்றில் சம்வர்த்த அனலம் எனப்படும் பிரளயத்தீ காலாக்னி ருத்திரன், சித் கலா திரிபுரா. 


காலாக்னியும் சித்கலாவும் பத்து கோணங்களைக் கொண்ட இரண்டு சக்கரங்களாக விரிகின்றன.  அவை சர்வ ரக்ஷாகரா மற்றும் சர்வார்த்த சாதகா என்றும் அழைக்கப்படுகின்றன.  உள்ளே இருக்கும் கோணங்கள் ட மற்றும் த வர்க்கத்தையும் வெளியே இருக்கும் கோணங்கள் ச மற்றும் க வர்க்கங்களையும் கொண்டுள்ளன. 

Monday, 10 July 2017

28. Relationship between subtle and gross madhyama

Verse 28
Aadhyaa kaaranam anyaa kaaryam tvanayo: yatastato heto:
Saeeveyam nahibedhastaatmyam hetu hetumadabesshtani

“The first (aadhyaa- subtle madhyama) is the cause (kaarana) and the other (gross madhyama) is the effect (kaaryam).  The latter (subtle) is the same as the former (gross).  There is verily no difference between the two for the identity of cause (hetu) and effect (hetumat) is axiomatic (dishta).”

Commentary:

The subtle madhyama is the cause for the gross madhyama.  They are related as cause and effect and hence are identical.

ஆத்யா காரணம் அன்யா கார்யம் த்வனயோ: யதஸ்ததோ ஹேதோ:
சயீவேயம் நஹிபேதஸ்தாத்ம்யம் ஹேது ஹேதுமதபீஷ்டானி

முதலில் இருப்பது காரணம் (சூட்சும மத்யமா) அடுத்து இருப்பது (ஸ்தூல மத்யமா) காரியம்.  முதலில் இருப்பது அடுத்து இருப்பதே. அவர்களுக்கிடையே எவ்வித வித்தியாசமும் இல்லை.  ஏனெனில் அவை காரண காரியங்கள் என்ற உறவைக் கொண்டுள்ளன.”

விளக்கவுரை:


சூட்சும மத்யமாவிலிருந்து ஸ்தூல மத்யமா தோன்றுகிறது.  அவை காரண காரியங்கள் என்ற தொடர்பைக் கொண்டுள்ளன.

26. Pashyanthi and madhyama

Verse 26
Ekaa paraa tadanyaa vaamaadi vyaashti maatr Srishti atma
Tena navatmaa jataa maataa saa madhyamaaabhidhaanaabhyaam

Dvividhaahi madhyamaa saa sookshmaa stoola aakritisthitaa sookshmaa
Navanaadamayee sthoolaa nava vargaatmaa ca bhoota lipi atma

 “She who is next to paraa (pashyanthi) is the creative self (srishyatma) out of which originated the individual mothers (vyashti maatr) Vama and others.  By this she became ninefold form (nava atma).  She, the mother Madhyamaa, is shown by her two names of two kinds (dvividhaa)- subtle (sookshma) and gross forms (shoolaariti).  As subtle she is ever existent and the nine sounds (nava nadha mayi).  As gross she is the nine groups (of letters) and has the name bhoota lipi.”

Commentary:

Para manifests as her next stage, Pashyanthi.  As Pashyanti, she is present as ninefold aspects and forms the nine triangles of the Srichakra (nava yoni chakraatmana).  As pashyanthi gives rise to the nine saktis beginning with Vama and ending with Santhaa, she is called the mother.  Vama is the producer of the universe, Jyeshta is all -beneficient (Siva mayi), Raudri destroys or dispels all ailments and burns up the fruits of all actions. Ambika grants all things desired.  She is the impuse to becoming, She is the Paraa vaak, Maha satta.  Saantaa is the all-pervading chinmaya sakthi.  She is transcendental, actionless and tranquil.

The next verse speaks of Madhyama.  It has ninefold character.  It is the state of union of Para and Pashyanthi.  She is visible or realizable by yogin whose minds are turned inwards (antarmukha).  This shakti exists as two forms- subtle and gross.  Her subtle form is perceived in samadhi.  As gross she is perceived as letters of the alphabet.  In the subtle form she is the nine sounds or Nada.  In the gross form, she is the nine groups of letters of the alphabet.  They are A, ka, ca, ta,tha, pa, ya, sa and la.

ஏகா பரா ததன்யா வாமாதி வ்யஷ்டி மாத்ரு ஸ்ருஷ்டி ஆத்மா
தேன நவாத்மா ஜடா மாதா ஸா மத்யம அபிதானாப்யாம்

த்விவிதாஹி மத்யமா ஸா சூக்ஷ்மா ஸ்தூல ஆக்ரிஸ்திதா சூக்ஷ்மா
நவநாதமயி ஸ்தூலா நவ வர்காத்மா ச பூதலிபி ஆத்மா

“பராவுக்கு அடுத்து இருப்பவள் ஸ்ருஷ்டி ஆத்மா, அவளிடமிருந்து வாமை முதலிய ஒன்பது மாதாக்கள் தோன்றுகின்றனர்.  இதனால் அவள் ஒன்பது உருவங்களைக் கொண்டவளாக மாறுகிறாள்.  மத்யமா என்ற அடுத்த நிலையை அடையும் அவள் இருவிதமான பெயர்களைக் கொண்டுள்ளாள்.  சூட்சும உருவில் அவள் எப்போதும் இருப்பவளாக ஒன்பதுவித சத்தங்களாக இருக்கிறாள்.  ஸ்தூல உருவில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாக இருந்து பூதலிபி என்று அழைக்கப்படுகிறாள்.”

விளக்கவுரை:

பராவின் அடுத்த நிலை பஷ்யந்தி.  அந்த நிலையில் அவள் ஒன்பது விசேஷங்களாக இருக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முக்கோணங்களாக (நவ யோனி சக்ராத்மனா) இருக்கிறாள். வாமை முதல் சாந்தா வரை அவளிடமிருந்து தோன்றுவதால் அவள் மாதா எனப்படுகிறாள்.  வாமை உலகைப் படைக்கிறாள். ஜ்யேஷ்டா உலகைக் காக்கிறாள் (அவள் சிவமயி) ரௌத்ரி அனைத்தையும் அழிக்கிறாள், எல்லா நோய்களையும் ஒழிக்கிறாள், எல்லா செயல்களின் பலன்களையும் எரித்து விடுகிறாள்.   அம்பிகை எல்லா விருப்பங்களையும் அருளுகிறாள்.  அவளே பராவாக், மகா சத்தா. சாந்தா என்பவள் எங்கும் பரந்திருக்கும் சின்மய சக்தி.  அவள் செயலைக் கடந்தவளாக, அனைத்தையும் கடந்தவளாக அமைதியின் உருவமாக இருக்கிறாள்.


அடுத்த பாடல் மத்தியமாவைப் பற்றிப் பேசுகிறது.  அது ஒன்பது குணங்களைக் கொண்டதாக இருக்கிறது.  அந்த நிலை, பராவும் பஷ்யந்தியும் ஐக்கியமடைந்த நிலை.  தமது மனத்தை உள்நோக்கித் திருப்பி அந்தர்முகமாக்கிய யோகிகள் அவளைக் காண்கிறார்கள்.  இந்த சக்தி இரு நிலைகளில்- சூட்சும மற்றும் ஸ்தூல நிலைகளில், இருக்கிறாள்.  அவளது சூட்சும நிலையை சமாதியில் காணலாம்.  ஸ்தூல நிலையில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாகக், அ, க, ச, ட, த, ப, ய, ஸ, ல, காணப்படுகிறாள்.  சூட்சும நிலையில் அவள் ஒன்பது வித சத்தங்களாக, நாதமாகக் காணப்படுகிறாள். 

Sunday, 2 July 2017

25. White, red and mixed

Verse 25
Evam kaamakalaatmaa tri bindhutativavaroopa  varnamayi
Syam trikona roopam yaataa triguna svaroopini maataa.
“In this way the united Kama and kala are three letters whose own form is the three bindhus.  It is she who is the mother who manifests as the three qualities and who assumed the form of the triangle.”

Commentary:
Kama means prakasha, the Parama siva and the first letter which is A.  Kala is the vimarsha is the last letter, ha.  The three bindus are the red, white and misra.  The three letters are vagbhava, kamaraja and sakthi. The red is the self-sustained bindu, Siva.  The white is its beloved.  Their union is the mixed bindhu.  The union is the pure state which is nivana. 

By saying saa iyam the author points out that she is the one who is experienced as the Atma, the witness, by yogs who experience universal consciousness. She manifests as satvam, rajas and tamas.  She is the chakra, sarva siddhi pradaayaka, created by the union of a with iccha, I. She is matha, the mother as she creates everything.

ஏவம் காமகலாத்மா த்ரி பிந்து தத் இவ ரூப வர்ணமயி
ஸ்யம் த்ரிகோண ரூபம் யாதா த்ரிகுண ஸ்வரூபிணி மாதா.

இவ்வாறு ஐக்கியமான காமா மற்றும் கலா, மூன்று பிந்துக்களைத் தமது உருவமாகப் பெற்ற மூன்று எழுத்துக்கள்.  அவளே மூன்று குணங்களாக வெளிப்படுபவள், முக்கோண உருவை எடுத்துக்கொள்ளும் மாதா.

காமா என்றால் பிரகாசம், பரம சிவம், அ என்னும் முதலெழுத்து.  கலா என்பது விமர்சம், ஹ என்ற கடைசி எழுத்து.  அவர்களது ஐக்கியம் மூன்று பிந்துக்களாகக் குறிக்கப்படுகிறது. சிவப்பு என்பது நிராதாரமாக இருப்பது. வெள்ளை என்பது அதன்  இணை. அவர்களது ஐக்கியம் மிஸ்ர பிந்துவைத் தோற்றுவிக்கிறது.  இந்த ஐக்கியம் உச்ச புனித நிலை, நிர்வாணம்.


சா இயம் என்பதன் மூலம் ஆசிரியர்சக்தியான அவளே ஆத்மாவாக, சாட்சியாக, பரவுணர்வைப் பெற்ற ரிஷிகளால் உணரப்படுகிறாள் என்று காட்டுகிறார். அவளே சத்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களாக இருந்து சிருஷ்டியை ஏற்படுத்துகிறாள், அதனால் அவளே தாய். அவள் சர்வ சித்திப்பிரதா என்ற சக்கரம்.  அது அ என்னும் இறைமை இ என்னும் இச்சையுடன் ஐக்கியமடையும்போது ஏற்படுகிறது.

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.