
Verse 37, 38
Aaseenaa bindumaye chakre saa tripurasundarii devii
Kaamesvaraanka nilayaa kalayaa chandrasya kalpitottamsaa
Paasha ankusekshu caapa prasoona: sharapanchaka ancitasvakaraa
Baalaarunaarunaangi shashibhaanu krishaanulochanatritayaa
“She, Devi Tripurasundari abides in
the bindu maya chakra. There she is
seated in the lap of Kamesavara, a digit (kala) of the moon is placed by her as
an adornment on her forehead. She holds
in her hands the noose, the goad, the sugarcane bow and the five flower
arrows. She is red like the rising
sun. The moon, the sun and the fire are
her three eyes.”
Commentary:
Bindu-maya chakram- this is called sarvanandamaya chakram or chakra of all
bliss. This is also called
paramakasha. Bhairava Yamala says she is
seated on the left lap of Kamesvara. The
kala or digit of the moon represents the life of the universe, time. By saying that it is placed it is shown that
the Chandra mandala is an accessory (upakarana) for Devi’s enjoyment.
Noose- represents iccha sakti, it is the bondage that causes distinction
between individual self and supreme self.
Goad- ankuksha- represents jnana sakthi. The distinction is destroyed by
the goad.
The sugarcane bow and five flower arrows- represent kriya sakthi, which is
the cause of attachment to things outside of one’s self. All these show that the iccha, jnana and
kriya sakti are within Devi’s control.
ஆசீனா பிந்து மத்யே
சக்ரே ஸா த்ரிபுர சுந்தரீ தேவீ
காமேச்வராங்க
நிலயா கலயா சந்த்ரஸ்ய கல்பிதோத்தம்சா
பாசாங்குசேக்ஷு
சாப ப்ரசூன: சரபஞ்சகாஞ்சிதஸ்வகரா
பாலாருணாருணாங்கி
சசிபானு க்ருஷானுலோசசனத்ரிதயா
"அவள் தேவி, த்ரிபுர சுந்தரீ பிந்து மத்ய சக்கரத்தில் காமேச்வரனின் மடியில்
அமர்ந்திருக்கிறாள். அவளது நெற்றியில் சந்திரனின் ஒரு கலை வைக்கப்பட்டிருக்கிறது. அவளது கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில்,
ஐந்து மலரம்புகள் ஆகியவை இருக்கின்றன.
அவள் உதிக்கும் சூரியனின் நிறத்தில் இருக்கிறாள். சந்திரன், சூரியன் மற்றும் அக்னி அவளது மூன்று
கண்களாக இருக்கின்றன.”
பிந்து மத்ய
சக்கரம் சர்வானந்தமய சக்கரம் அல்லது எல்லா ஆனந்தங்களையும் கொண்டது என்று
பொருள்படும் சக்கரமாகும். அது பரமாகாசம்
என்றும் அழைக்கப்படுகிறது. பைரவி யாமளம், “தேவி காமேச்வரனின் இடது தொடையில்
அமர்ந்திருக்கிறாள்,” என்கிறது.
சந்திரனின் கலை பிரபஞ்சத்தின் வாழ்க்கையை, காலத்தைக் குறிக்கிறது. அது தேவியின் நெற்றில் உள்ளது என்று கூறுவது
அதுவும் தேவியின் ஆனந்தத்துக்கு ஒரு உபகரணமாகும் என்று பொருள்.
பாசம் இச்சா
சக்தியைக் குறிக்கிறது. அது ஜீவனுக்கும்
ஈஸ்வருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
அங்குசம் ஞான
சக்தியைக் குறிக்கிறது. அந்த சக்தியினால் மேற்கூறிய வித்தியாசம்
தவிர்க்கப்படுகிறது
கரும்பு
வில்லும் மலரம்புகளும் கிரியா சக்தியைக் குறிக்கின்றன. அவை ஜீவனை விட்டு வேறான பொருள்களில் அதற்கு
இருக்கும் பற்றைக் குறிக்கிறது. இவ்வாறு
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய அனைத்தும் தேவியின் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment