Verse 29,30
Saśapavargamayam tadvasukonam madhya kona vistaara:
Navakonam madhyam cetyasmimshichiddeepadeepite dasake
Tacchaayaa dvitayamidam dashaara chakra dvayaatmanaav itatam
Tadacakavarga catushtaya vilasanavispashtakona vistaaram
“The chakra of eight triangles consisting the letters sa,śa, sha and the pa
varga is an expansion of the middle triangle.
These nine triangles together with the bindu make the ten which are
lighted by the light of chith (chith deepa).
The two lights of these ten are spread forth as two chakras of ten
triangles each of which the inner ten triangles display the tha varga and the
ta varga and the outer ten trianges display the cha varga and ka varga.”
Commentary:
This verse talks about the emergence of the vaikari sakthi in terms of the
triangles that emerge from the light and energy of the middle triangle.
The chakra of eight triangles called the sarva roga hara (destroyer of all
diseases) contains the eight letters, sa, śa, sha and the pa varga. This is the expansion of the middle
triangle. Thus there are totally nine
triangles and when the bindu is included it becomes ten. This group is illuminated by the light of
chith, the light of consciousness, the rays that surround Tripura the mother
seated at the bhindu chakra. She is
light herself. The two lights are the
fire of dissolution (samvarta anala) and chith kala. The samvarta anala is the fire of pralaya,
the all devouring Kaalaagni Rudra. Chith
kala is Tripura.
The two lights of fire and chith kala spread as the two chakras of ten
triangles each. They are called sarva
rakshaakara (all protector) and savartha saadhaka (all accomplisher). The inner triangle has the tha and ta varga
while the outer triangles have the cha and ka varga.
ஸசப வர்கமயம்
தத்வசுகோணம் மத்ய கோணவிஸ்தார:
நவகோணம் மத்யம்
சேத்யஸ்மிம்ச் சித் தீப தீபிதே தசகே
தத் சாயா த்விதயமிதம்
தசார சக்ர த்வயாத்மனாவ இததம்
தடசக வர்க்க
சதுஷ்டய விலசனவிஸ்பஷ்டகோண விஸ்தார்ணம்
“எட்டு கோணங்களைக்
கொண்ட, ஸ,ச,ஷ மற்றும் ப வர்க்கம் எழுத்துக்களைக் கொண்ட கோணம் மத்திய கோணத்தின்
விரிவு ஆகும். இவ்வாறு மத்திய கோணத்தையும்
சேர்த்து ஒன்பது கோணங்களும், பிந்துவுடன் சேர்த்து பத்து கோணங்களாகவும் இருக்கும்
இது சித்தின் தீபத்தினால் ஒளியூட்டப்படுகிறது.
இந்த பத்து கோணங்களின் இரு ஒளிகள் இரண்டு பத்து கோணங்களாக விரிவடைகின்றன. அவற்றில் உள்பத்துக்கோணம் ட மற்றும் த
வர்க்கத்தையும் வெளியிலுள்ள பத்துக் கோணங்கள் ச மற்றும் க வர்க்க எழுத்துக்களையும்
கொண்டுள்ளன.”
விளக்கவுரை:
இப்பாடல் கோணங்களாக
எழும் வைகரி சக்தியின் தோற்றத்தைப் பேசுகிறது.
இது மத்திய முக்கோணத்தின் ஒளி மற்றும் சக்தியிலிருந்து தோன்றுகிறது.
எட்டு
கோணங்களைக் கொண்ட உருவம் சர்வ ரோக ஹரா எனப்படுகிறது. இது ஸ, ச, ஷ மற்றும் ப வர்க்க எழுத்துக்களைக்
கொண்டுள்ளது. இது மத்திய முக்கோணத்தின் விரிவு.
இவ்வாறு மத்திய கோணத்தைச் சேர்த்து ஒன்பது கோணங்களும் பிந்துவையும்
சேர்த்து பத்து கோணங்களையும் உடைய உருவம் உள்ளது.
இது சித்தின் ஒளியால் ஒளியூட்டப்படுகிறது.
இந்த ஒளிக் கதிர்கள் பிந்துவில் அமர்ந்திருக்கும் திரிபுராவைச்
சூழ்ந்திருக்கும் ஒளியாகும். அவளே
ஒளியாவாள். இரு ஒளிகள் என்பது பிரளய காலத்
தீ மற்றும் சித் கலா. இவற்றில் சம்வர்த்த
அனலம் எனப்படும் பிரளயத்தீ காலாக்னி ருத்திரன், சித் கலா திரிபுரா.
காலாக்னியும்
சித்கலாவும் பத்து கோணங்களைக் கொண்ட இரண்டு சக்கரங்களாக விரிகின்றன. அவை சர்வ ரக்ஷாகரா மற்றும் சர்வார்த்த சாதகா
என்றும் அழைக்கப்படுகின்றன. உள்ளே
இருக்கும் கோணங்கள் ட மற்றும் த வர்க்கத்தையும் வெளியே இருக்கும் கோணங்கள் ச
மற்றும் க வர்க்கங்களையும் கொண்டுள்ளன.
No comments:
Post a Comment