Verse 31
Etaccakra chatushka prabhaasa metam dashaara parinaama:
aadisvaragaNagata- catur-dashaavarNa mayam chaturdashaaram abhoot
“The light of the first four chakras is the fully evolved chakra of ten triangles. Then appeared the chakra of fourteen
triangles that contains the fourteen vowels beginning with A.”
Commentary:
The four chakras are bindu, trikona, eight triangled and inner ten
triangled chakras. The outer chakra of
ten triangles is described as fully evolved.
The fourteen triangled chakra contains the fourteen vowels that begin with “a”. This chakra is called sarva saubhagya
daayaka.
ஏதக்சக்ர சதுஷ்க
பிரபாஸ மேதம் தசார பரிணாம:
ஆடிஸ்வரகணகத
சதுர் தசாவர்ணமயம் சதுர்தசாரம் அபூத்
“பத்து கோணங்களைக் கொண்ட,
பூரண வெளிப்பாடுடைய சக்கரம் முந்தைய நான்கு சக்கரங்களின் ஒளியாகும். இதன் பிறகு
பதினான்கு கோணங்களைக் கொண்ட, அகாரம் முதலான உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் தோன்றுகிறது.”
விளக்கவுரை:
இப்பாடலில் குறிப்பிடப்பட்ட
நான்கு சக்கரங்கள், பிந்து, முக்கோணம், எட்டு கோண சக்கரம், உள் பத்து கோணச்
சக்கரம் என்பவை. பூரண வெளிப்பாடுடைய
சக்கரம் வெளி பத்து கோண சக்கரம். பதினான்கு
கோணங்களைக் கொண்ட, உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் சர்வ ஸௌபாக்யதாயக சக்கரம்
எனப்படும்.
No comments:
Post a Comment