Verse 26
Ekaa paraa tadanyaa vaamaadi vyaashti maatr Srishti atma
Tena navatmaa jataa maataa saa madhyamaaabhidhaanaabhyaam
Dvividhaahi madhyamaa saa sookshmaa stoola aakritisthitaa sookshmaa
Navanaadamayee sthoolaa nava vargaatmaa ca bhoota lipi atma
“She who is next to paraa
(pashyanthi) is the creative self (srishyatma) out of which originated the
individual mothers (vyashti maatr) Vama and others. By this she became ninefold form (nava
atma). She, the mother Madhyamaa, is
shown by her two names of two kinds (dvividhaa)- subtle (sookshma) and gross
forms (shoolaariti). As subtle she is
ever existent and the nine sounds (nava nadha mayi). As gross she is the nine groups (of letters)
and has the name bhoota lipi.”
Commentary:
Para manifests as her next stage, Pashyanthi. As Pashyanti, she is present as ninefold
aspects and forms the nine triangles of the Srichakra (nava yoni chakraatmana). As pashyanthi gives rise to the nine saktis
beginning with Vama and ending with Santhaa, she is called the mother. Vama is the producer of the universe, Jyeshta
is all -beneficient (Siva mayi), Raudri destroys or dispels all ailments and
burns up the fruits of all actions. Ambika grants
all things desired. She is the impuse to
becoming, She is the Paraa vaak, Maha satta.
Saantaa is the all-pervading chinmaya sakthi. She is transcendental, actionless and
tranquil.
The next verse speaks of Madhyama.
It has ninefold character. It is
the state of union of Para and Pashyanthi.
She is visible or realizable by yogin whose minds are turned inwards
(antarmukha). This shakti exists as two
forms- subtle and gross. Her subtle form
is perceived in samadhi. As gross she is
perceived as letters of the alphabet. In
the subtle form she is the nine sounds or Nada.
In the gross form, she is the nine groups of letters of the alphabet. They are A, ka, ca, ta,tha, pa, ya, sa and
la.
ஏகா பரா ததன்யா
வாமாதி வ்யஷ்டி மாத்ரு ஸ்ருஷ்டி ஆத்மா
தேன நவாத்மா ஜடா
மாதா ஸா மத்யம அபிதானாப்யாம்
த்விவிதாஹி மத்யமா
ஸா சூக்ஷ்மா ஸ்தூல ஆக்ரிஸ்திதா சூக்ஷ்மா
நவநாதமயி ஸ்தூலா
நவ வர்காத்மா ச பூதலிபி ஆத்மா
“பராவுக்கு
அடுத்து இருப்பவள் ஸ்ருஷ்டி ஆத்மா, அவளிடமிருந்து வாமை முதலிய ஒன்பது மாதாக்கள்
தோன்றுகின்றனர். இதனால் அவள் ஒன்பது
உருவங்களைக் கொண்டவளாக மாறுகிறாள். மத்யமா
என்ற அடுத்த நிலையை அடையும் அவள் இருவிதமான பெயர்களைக் கொண்டுள்ளாள். சூட்சும உருவில் அவள் எப்போதும் இருப்பவளாக
ஒன்பதுவித சத்தங்களாக இருக்கிறாள். ஸ்தூல
உருவில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாக இருந்து பூதலிபி என்று
அழைக்கப்படுகிறாள்.”
விளக்கவுரை:
பராவின் அடுத்த
நிலை பஷ்யந்தி. அந்த நிலையில் அவள் ஒன்பது
விசேஷங்களாக இருக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முக்கோணங்களாக (நவ யோனி
சக்ராத்மனா) இருக்கிறாள். வாமை முதல் சாந்தா வரை அவளிடமிருந்து தோன்றுவதால் அவள் மாதா
எனப்படுகிறாள். வாமை உலகைப் படைக்கிறாள். ஜ்யேஷ்டா
உலகைக் காக்கிறாள் (அவள் சிவமயி) ரௌத்ரி அனைத்தையும் அழிக்கிறாள், எல்லா
நோய்களையும் ஒழிக்கிறாள், எல்லா செயல்களின் பலன்களையும் எரித்து விடுகிறாள். அம்பிகை
எல்லா விருப்பங்களையும் அருளுகிறாள். அவளே
பராவாக், மகா சத்தா. சாந்தா என்பவள் எங்கும் பரந்திருக்கும் சின்மய சக்தி. அவள் செயலைக் கடந்தவளாக, அனைத்தையும் கடந்தவளாக
அமைதியின் உருவமாக இருக்கிறாள்.
அடுத்த பாடல்
மத்தியமாவைப் பற்றிப் பேசுகிறது. அது ஒன்பது
குணங்களைக் கொண்டதாக இருக்கிறது. அந்த
நிலை, பராவும் பஷ்யந்தியும் ஐக்கியமடைந்த நிலை.
தமது மனத்தை உள்நோக்கித் திருப்பி அந்தர்முகமாக்கிய யோகிகள் அவளைக்
காண்கிறார்கள். இந்த சக்தி இரு நிலைகளில்-
சூட்சும மற்றும் ஸ்தூல நிலைகளில், இருக்கிறாள்.
அவளது சூட்சும நிலையை சமாதியில் காணலாம்.
ஸ்தூல நிலையில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாகக், அ, க, ச, ட, த, ப, ய,
ஸ, ல, காணப்படுகிறாள். சூட்சும நிலையில்
அவள் ஒன்பது வித சத்தங்களாக, நாதமாகக் காணப்படுகிறாள்.
No comments:
Post a Comment