Sunday, 30 July 2017

40. Rahasya yogini

Verse 40
Vasukona nivaasinyo yaastaa: sandhyaarunaa vasinyaadhyaa:
Puryashtakamevedam chakratano: samvidaatmano devyaa:

“Those that abide in the chakra of eight triangles are Vasini and others who are red like the evening sun.  This is the eight-fold subtle body (sookshma sarira, puri ashtaka) of the Devi which is the chakra and the Self is the Supreme experience (samvidh).”

Commentary:
The chakra of eight triangles is called sarva rogahara (all diseases destroyer).  The eight Sakthis called rahasya yogini.  They are Vasini (one who attracts everything), Kameswari (mistress of lust), Modini (she who is happy), Vimala (blemishless), Aruna (red in color), Jayini (always victorious), Sarveswari (mistress of all) and Kaulini (mistress of kula achara).

Devi is the supreme experience, samvid.  Her form is knowledge itself. 
The eight triangles form the subtle body or sookshma sarira of Devi.  The Puri ashtaka are karmendriya, jnanendriya, manas, prana, elements, kama, karma and tamas- according to Bhaskararaya’s commentary on Nitya sodashika.  (160-164).

வசுகோண நிவாஸின்யௌ யாஸ்தா: சந்த்யா(அ)ருணா வசின்யாத்யா
புர்யஷ்டகமேவேதம் சக்ரதனோ: சம்வித் ஆத்மனோ தேவ்யா:
தேவி உச்ச உணர்வு, சம்வித். அவளது உருவம் ஞானம்.

“எட்டு கோணங்களில் இருப்பவர்களான வசினி முதலியவர்கள் சந்தியா கால அருணம் போன்ற நிறத்தையுடையவர்கள்.  இது தேவியின் புரியஷ்டகமான சூட்சும சரீரம்.  அதுவே சக்கரமாக இருக்கிறது. அங்கு ஆத்மா உச்ச உணர்வாக, சம்வித்தாக இருக்கிறது.”

எட்டு கோணங்களைக் கொண்ட சக்கரம் சர்வ ரோகஹரா (எல்லா வியாதிகளையும் தீர்ப்பது) என்று அழைக்கப்படுகிறது.  அதில் இருக்கும் சக்தி ரகசிய யோகினி.  அவர்கள் வசினி (அனைத்தையும் கவர்பவள்), காமேஸ்வரி (காமத்துக்கு அதிபதி), மோதினி (மகிழ்ச்சியாக இருப்பவள்), விமலா (குற்றமற்றவள்), அருணா (சிவந்த நிறத்தையுடையவள்), ஜெயினி (எப்போதும் வெற்றியையுடையவள்), சர்வேச்வரி (அனைத்துக்கும் அதிபதி) மற்றும் கௌலினி (குலத்துக்கு அதிபதி).


எட்டு கோணங்களையுடைய சக்கரம் அவளது புரியஷ்டகமான சூட்சும சரீரம். நித்ய சோடஷிகா என்னும் நூல் தேவியின் புரியஷ்டகம் என்பது கர்மேந்த்ரியம், ஞாநேந்த்ரியம், மனஸ், பிராணன், பஞ்ச பூதங்கள், காமம், கர்மம் மற்றும் தமஸ் என்று பாஸ்கரராயரின் விளக்கவுரை கூறுகிறது.

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.