Thursday, 24 August 2017

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.


Image result for srividya vajreshwari

55. Conclusion

Verse 55
Cinthaantarangatarala strishnaasalila: prapancha vaaraasi:
Yadanugrahena teernastamai sreenaathanavaavikaaya nama:

“Obesience to the venerated Lord the boatman (Srinatha naavika) by whose grace I have crossed this ocean of wandering, the waters of which are desire (trishna salila) and the surface of which is restless with the waves of anxiety (chinthaa
Taranga capala).

சிந்தாதரங்கதரல ஸ்த்ரிஷ்ணாசலில: பிரபஞ்ச வாராஸி:
யதனுக்ரஹேண தீர்ணஸ்தமை ஸ்ரீநாதநவாவிகாய நம:

“யாரது அருளால் ஆசை என்னும் நீரைக் கொண்ட தனது மேற்பரப்பில் அலைகள் என்ற அசைவை/ சபலத்தைக் கொண்ட இந்த அலைச்சல் என்னும் கடலைக் கடந்துள்ளேனோ, அவ்வாறு படகான ஸ்ரீநாதருக்கு வணக்கங்கள்.”

54. Thus emerged kamakala vilasam

Verse 54
Uditha: punyaanandhaditi kaamakalaanganaa vilaasoyam
Parasiva bhujangabhaavaakarshana harsaaya kalpate nityam

“This is the end of the description by Punyananda of the playful movement of the beautiful woman kama-kala which ever attracts the desire of the amorous Parasiva.”

Commentary:
Iti means thus. Punyananda indicates that this is the concluding part of the work. Kamakala is the vimarsa sakthi. She is the beautiful woman whose amorous movements appear as the form of the chakra, the aavarana devata and other aspects. These movements are caused by seeing her beloved, Parasiva. These movements attract his chittham always and produce in him an excess of desire.

Another interpretation- this book is kamakala vilasam and it brings gladness to Para siva. Kamakala- sakthi, book, vilasam- movement, name of the book

உதித: புண்யானந்தாதிதி காமகலாங்கனா விலாசோயம்
பரசிவ புஜங்கபாவாகர்ஷண ஹர்ஸாய கல்பதே நித்யம்

“அழகான அந்த பெண்ணான, காமம் மிகுந்த பரசிவனின் ஆசையைத் தூண்டும், காமகலாவின் விளையாட்டான செயல்பாட்டை விவரிக்கும் புண்யானந்தரின் விளக்கம் இவ்வாறு முடிவுறுகிறது.”

விளக்கவுரை:
இதி என்றால் இவ்வாறு என்று பொருள். இந்த நூல் இத்துடன் முடிவுறுகிறது என்று புண்யானந்தர் இவ்வாறு குறிக்கிறார். காமகலா என்பது விமர்ச சக்தி. அவள் அழகான பெண். அவளது ஆசையைத் தூண்டும் அசைவுகள் சக்கரமாகவும் ஆவரண தேவதைகளாகவும் பிற அம்சங்களாகவும் விரிகின்றன.
இந்த அசைவுகள் அவள் தனது காதலனான பரசிவனைப் பார்ப்பதால் ஏற்படுகின்றன. இந்த அசைவுகள் அவரது சித்தத்தைக் கவர்ந்து அவருள் அதீத ஆசையை/காமத்தைத் தோற்றுவிக்கின்றன

மற்றொரு விளக்கம் இந்த நூல் காமகலா விலாசம் அது பரசிவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. காமகலா-சக்தி, புத்தகம், விலாசம்- அசைவு, புத்தகத்தின் பெயர்

Wednesday, 23 August 2017

52, 53. Gurus of different types and different eons

Verse 52 and 53
Sayaaya mitrasanjnaam sthaaneshaan Jyeshta Madhya baalaakhyaan
Citpraana vishayabhootaan trethaayugaadikaaranatriguroon

Beejatritayaadhipateen pareeksya vidyaam prakaashayaamaasa
Etairoghatritayam tamanugrheetam gurukramo vidita:

“She who is the Queen of the three places and bears the appellations of the eldest, the middle and the youngest and who is the object of enjoyment of Parama Siva assumed the name of Mitradeva.  It is she who purified the gurus by initiation revealed the vidya to them.  The gurus are the seeds of the three ages, the first of which is Treta and who are the Lords of the three bijas.  It is by these three gurus that the three groups or classes (ogha) are maintained.  Now has been said the order of the gurus (guru karma).

Commentary:
Kameshwara and Kameshvari are sama tattva, and identical. Sakti is ever young and the cause of the universe (visva yoni).  Parama siva who was desirous of revealing his secret system did so with the aid of Kameshwari who is the cause of all.

After creating the universe in the first yuga Paramasiva was in the Uddiyana pitha which is replete with the Bliss of his own illumination (Prakasha Ananda saaramaya).  He, under his name Sri Carya nanda natha instructed the Lady who is one with Him in the rules of Sri Vidya.  He says, “verily do I adore the great center of the chakra which is supeme bliss and the innermost essence of Prakasha, vimarsha and pure experience.”

Sakti, in the other three yugas transmitted the knowledge, in the form of gurus.  There are two lines of Sri Vidya, the Kamaraja and that of Lopamudra.  The Kamaraja line, has seven gurus of the divya class, four of the siddha class and eight of the maanava class.  The order of the divya class is as follows:

Krita yuga- Paramasiva along with Maha Tripurasundari- abide in center- uddiyana peeta
Treta yuga- the apex-Urdhvadeva natha along with Kamesvari- Kama rupa pita- Vagbhava bija
Dvapara yuga- right corner of the triangle- Jaalandhara pitha- Saasthadeva natha in union with Vajreswari- presideing deity of Kamaraja bija
Kali yuga-left corner of the triangle- Poornagiri pita- Mitradeva natha in union with Bhagamalini who is the devata of Sakti Bija.

Mitresha deva bestowed his grace at the beginning of the kali yuga, on Lopamudra and Agatya the couple refulgent for their great austerity (tapas). 
Devi bears the name of Jyeshta which means elder as well as most excellent, Madhya and baala. 
Paramasiva is the svarupa of chith and is prana itself.

Devi purifies the gurus and instructs them in the vidya after deeksha or initiation.  Initiation is of three types aanavi, saaktheya and saambhavi.  It grants union (sayujya) with Siva.  Anava diksha involves worship with articles. There is also a need intense devotion, tarpana and Dhyana of the para devata.  Sakteya diksha is given when the guru perceives that the disciple is ready for a particular form of sadhana.  Sambhavi diksha is that where the mere grace of the guru makes the siva state manifest and produce the bliss of siva.  The preceptor and the disciple should be selfless, without any worldly desire or motive.

Thus we understand that without initiation the purpose of the sadhana will not be fulfilled. 
The saankhyaayana saakha states that “those who after having fully realized her, offer oblations in the srichakra which is not separate from their body, with wine which has been converted to nectar by purification, become delirious in the excess of their joy, dwell in the high region where there is neither pair nor sorrow and enter the Supreme light of Tripura.”

Lalitharchana manjari gives the names of the gurus as follows:
Seven of the divya class:
Para prakashaananda natha
Para sivaanandha natha
Para sakthidevyamba
Kauleshvaraananda natha
Suklaa devyamba
Kuleswaraananda natha
Kameshvaryamba

The four gurus of the siddha class:
Bhogaanandha natha
Klinnaanandha natha
Samayaananda natha
Sahajaananda natha

Eight of the maanava class:
Gangaanandha natha
Visvaanandha natha
Vimalaanandha natha
Madhaananda natha
Bhuvanaananda natha
Neelaanandha natha
Atmaanandha natha
Priyaanandha natha
The Divya class should be worshipped behind and the other two on her left and right respectively.

ஸயாய மித்ரசஞ்னாம் ஸ்தானேஷான் ஜ்யேஷ்டா மத்யா பாலாக்யான்
சித்ப்ராண விஷய பூதான் த்ரேதாயுகாதிகாரண த்ரிகுரூன்

பீஜத்ரிதயாதிபதீன் பரீக்ஷ்ய வித்யாம் பிரகாஷயாமாச
யேதைரோக த்ரிதயம் தமனுக்ரஹீதம் குருக்ரமோ விதித:

“ஜ்யேஷ்டா, மத்யா, பாலா என்ற நாமங்களைக் கொண்ட மூன்று இடங்களின் ராணியான அவள் மித்ரதேவன் என்ற பெயரை ஏற்றுக்கொண்ட பரமசிவன் இன்பம் துய்க்கக் காரணமான பொருளாகிறாள்.  

அவளே குருக்களை தீட்சைகளின் மூலம் தூய்மைப்படுத்தி அவர்களுக்கு ஸ்ரீவித்யாவை உபதேசிக்கிறாள்.  த்ரேதா முதலிய யுகங்களின் வித்துக்களான குருக்கள் மூன்று பீஜங்களின் அதிதேவதைகள் ஆவர்.  இந்த மூன்று விதங்களான குருக்களால் மூன்று பிரிவுகள் (ஓகங்கள்) வழிநடத்தப்படுகின்றன.  இவ்வாறு குருக்ரமம் கூறப்படுகிறது.”

காமேஸ்வரனும் காமேச்வரியும் சம தத்துவங்கள், தம்மிடையே வித்தியாசம் இல்லாதவர்கள்.  சக்தி எப்போதும் இளமையோடு இருப்பவள், உலகுக்குக் காரணம் (விஸ்வ யோனி) என்று அழைக்கப்படுகிறாள். தனது ரகசிய வித்யையை வெளிப்படுத்த விரும்பிய பரமசிவன் அனைத்துக்கும் காரணமான காமேஸ்வரியின் உதவியுடன் அதை வெளிப்படுத்தினார்.

முதல் யுகமான க்ருத யுகத்தைப் படைத்த பின் பரமசிவன் பிரகாச ஆனந்த சாரமயமான உட்டியாண பீடத்தில் இருக்கிறார்.  அவர் ஸ்ரீசர்யானந்த நாதர் என்ற பெயரில் தன்னுடன் ஒன்றாக ஐக்கியமடைந்திருக்கும் சக்திக்கு ஸ்ரீ வித்யாவை உபதேசித்தார்.  “பிரகாசம் விமர்சம், தூய அனுபவம் என்பவற்றின் சாரமாக இருக்கும் சக்கரத்தின் மேன்மை பொருந்திய மத்தியை நான் வணங்குகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த வித்யையை தேவி பிற யுகங்களில் குருக்களின் உருவில் பரவச் செய்தாள்.  ஸ்ரீவித்யையில் இரு பரம்பரைகள் உள்ளன.  அவை காமராஜ பரம்பரை மற்றும் லோபா முத்ரா பரம்பரை என்பவை.  இதில் காமராஜ பரம்பரையின் திவ்ய பிரிவில் ஏழு குருக்களும் சித்த பிரிவில் நான்கு குருக்களும் மானவ பிரிவில் எட்டு குருக்களும் உள்ளனர். 

திவ்ய பிரிவில் உள்ள குருக்கள் நான்கு என்றும் ஏழு என்றும் நூல்கள் கூறுகின்றன.
அவர்கள் பின்வருமாறு:
க்ருத யுகம்- உட்டியாண பீடம்- பரமசிவன் மகாத்ரிபுர சுந்தரி
த்ரேதாயுகம்- முக்கோணத்தின் உச்சி- ஊர்த்தவதேவ நாதர் மற்றும் காமேஸ்வரி- காமரூப பீடம்- வாக்பாவ பீஜம்
த்வாபர யுகம்- வலது மூலை, ஜாலந்தர பீடம்- வஜ்ரேஸ்வரியுடன் ஐக்கியத்தில் இருக்கும் சாஸ்ததேவ நாதன்- காமராஜ பீசத்தின் அதிதேவதை
கலி யுகம்- முக்கோணத்தின் இடது மூலை- பூர்ணகிரி பீடம்-பகமாலினியுடன் ஐக்கியத்தில் இருக்கும் மித்ரதேவநாதர். அவள் சக்தி பீஜத்தின் அதிதேவதை.

மித்ரேசர் கலியுகத்தின் ஆரம்பத்தில் லோபாமுத்ரா மற்றும் அகத்தியர் தம்பதிக்கு அவர்களது தவத்தைக் கண்டு மகிழ்ந்து இந்த வித்யையைக் கற்றுக்கொடுத்தார்.

தேவி, ஜ்யேஷ்டா அல்லது முதலாமவள்/உத்தமமானவள், மத்யமா மற்றும் பாலா என்ற பெயர்களைத் தாங்கியிருக்கிறாள்.

பரமசிவன் சித்த ஸ்வரூபமாக இருக்கிறார், அவரே பிராணன்.

தேவி குருக்களைத் தூய்மைப்படுத்தி (தீட்சையின் மூலம்) அவர்களுக்கு வித்யையை உபதேசித்தாள். ஆணவ, சாக்தேய மற்றும் சாம்பவி என்று தீட்சை மூன்று வகைப்படும்.  அது சிவ சாயுஜ்யத்தை அருளுகிறது.  ஆணவ தீட்சை பெற்றால் பொருள்களைக் கொண்டு தர்ப்பணம், தியானம் பக்தி முதலியவற்றைச் செய்யவேண்டும்.  ஒரு சீடன் ஒரு குறிப்பிட்ட சாதனைக்குத் தயார் என்பதைப் பார்த்த குரு அழிப்பது சாக்தேய தீட்சை. சாம்பவ தீட்சை என்பது குருவின் பார்வை ஒன்றே சிவநிலையைத் தோற்றுவித்து சிவானந்தத்தைத் தருவது.  இதற்கு சீடனும் குருவும் தன்னலமற்றவர்களாக எவ்வித உலக ஆசைகளும் இலக்குகளும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தீட்சை இல்லாவிட்டால் சாதனை பலனளிக்காது என்பதை இதனால் புரிந்து கொள்கிறோம்.

“தேவியை முழுவதும் புரிந்துகொண்டவர்கள் தமது உடலாக இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் தூய்மைப்படுத்தப்பட்டு அமிர்தமாக்கப்பட்ட மதுவை பிரசாதமாக சமர்ப்பித்து, தமது மகிழ்ச்சியால் மதியிழந்து, துன்பமோ வலியோ இல்லாத இடத்தில், திரிபுராவின் உச்ச ஒளியில் புகுகின்றனர்” என்று  சாங்காயன சாகை கூறுகிறது.

லலிதார்ச்சன மஞ்சரி குருக்களின் பெயர்களை இவ்வாறு கூறுகிறது
திவ்ய  பிரிவு:
பர பிரகாசானந்த நாதர்
பர சிவானந்த நாதர்
பர சக்திதேவ்யாம்பா
கௌலேஸ்வரானந்த நாதர்
சுக்லா தேவ்யாம்பா
குலேஸ்வரானந்த நாதர்
காமேச்வர்யாம்பா

சித்தர் பிரிவு:
போகநந்த நாதர்
க்லின்னாநந்த நாதர்
சமயாநந்த நாதர்
சஹாஜாநந்த நாதர்

மானவர் பிரிவு:
கங்கானந்த நாதர்
விஸ்வானந்த நாதர்
விமலானந்த நாதர்
மதானந்த நாதர்
புவனானந்த நாதர்
நீலானந்த நாதர்
ஆத்மானந்த நாதர்
ப்ரியானந்த நாதர்

திவ்ய பிரிவு தேவியின் பின்புறத்திலும் மற்றவை இரண்டும் முறையே இடது வலது புறங்களிலும் வழிபடப்பட வேண்டும்.

Tuesday, 22 August 2017

51. Adiguru was Siva who taught this vidya to his Sakti, during krita yuga

Verse 51
Aaseena: shree peete krutayugakaale guru: shivo vidyaam
Tasyai dadau svasakhtyai kameshvaryai vimarsha roopininyai

“Siva the guru who abides in the Uddiyaana pitha did in the Krita yuga imparted the Vidya to Her, his own Sakti, the vimarsha roopini, Kameshwari.”

Commentary:
Gu means darkness and ru means dispelling it.  Thus guru dispels the darkness.
Uddiyanapitha- Siva is at the Uddiyana pita within the innermost triangle.
Krita yuga- Siva imparted the knowledge of the Vidya to Sakti during this time. Vidya is the means by which man realizes his oneness with his soul.

ஆஸீன: ஸ்ரீபீடே க்ருத யுககாலே குரு: சிவோ வித்யாம்
தஸ்யை ததது ஸ்வசக்த்யை காமேச்வர்யை விமர்ச ரூபிணின்யை

“ஸ்ரீ பீடத்தில் (உட்டியாண பீடத்தில்) உறையும் சிவகுரு க்ருதயுகத்தில் இந்த வித்யையை தனது சக்திக்கு, விமர்ச ரூபிணிக்கு, காமேச்வரிக்கு, உபதேசித்தார்.”

விளக்கவுரை:
கு என்றால் இருட்டு, ரு என்றால் விலக்குவது.  இவ்வாறு குரு என்பவர் அஞ்ஞானம் என்ற இருட்டை விலக்குபவராகிறார்.  உட்டியாண பீடம் மத்தியில் முக்கோணம்.

க்ருத யுகத்தில் சிவன் இந்த வித்யையைசக்திக்கு உபதேசித்தார். இதன் மூலம் மனிதன் தனது ஆன்ம நிலையை உணருகிறான்.

50. Division of the singularity into duality

Verse 50
Paramaananda anubhava: parama gurunirvishesha bindvaatma
Sa puna: kramena bhinna: kameshatvam yayau vimarshamsaat

“Parama siva who is the Lord and is one with the bindu experiences the highest bliss.  It is he who in his vimarsa aspect becomes gradually differentiated and assumes the form of Kamesa.”

Commentary:
Having described the unfolding of the chakra, which is a manifestation of Kamakala now the author is beginning to describe the series of gurus beginning with Paramasiva, in four verses.

The supreme Paramasiva divides himself into Kama and Kameshwari, the guru and the disciple. Thus arose the two states of Prakasha vimarsha, the husband and wife.

பரமானந்த அனுபவ: பரம குரு நிர்விசேஷ பிந்த்வாத்மா
ஸா புன: க்ரமேண பின்ன: காமேஷத்வம் யயௌ விமர்ஷம்சாத்

தலைவரும் பிந்துவுடன் ஒருமை நிலையில் இருப்பவருமான பரமசிவம் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறார்.  அவரே விமர்சம் என்ற நிலையில் மெதுவாக வேறுபாடடைந்து காமேசன் என்று ஆகிறார்.”

விளக்கவுரை:
இதுவரை ஸ்ரீசக்கரத்தின் விரிவான காமகலையின் வெளிப்பாடை விளக்கியபிறகுஇப்போது குருக்களின் வரிசையை இனி வரும் நான்கு பாடல்களில் விளக்க முனைகிறார் ஆசிரியர்.

உச்ச ஒருமை நிலையான பரமசிவம் தன்னை காமேஸ்வரன், காமேஸ்வரி என்று இரண்டாக, குரு சீடன் என்பதாகப் பிரித்துக்கொள்கிறது.  இவ்வாறு அது பிரகாசம், விமர்சம் அல்லது கணவன் மனைவி என்று இருக்கிறது.

49. Ashta siddhi, the last rung in Sri Chakra

Verse 49
Animaadhi sidhayo:yaa: kamaneeya kaaminee roopaa:
Vidyaantara phala bhootaa: guna bhaavenaantya bhooniketanagaa:

“Her eight powers anima and others assume the forms of beautiful young women and are attainable y other practices.  Being of secondary nature they are in the last section of the bhupura.

Commentary:
Her eight powers are anima, lagima, mahima, ishitva, vasishtva, prakamya, bhukti, iccha, prapti, sarva kama.

They are attained by other vidhyas such as hatha yoga and others.  They are of secondary nature or guna.  They should be considered inferior to moksha.  Hence, they are in the lowest section of the bhupura.  By worshipping the Paramatma in this manner the sadhaka becomes the Great Lord himself.

அணிமாதி சித்தயோ: யா: கமனீய காமிநீ ரூபா:
வித்யாந்தர பல பூதா: குண பாவேநான்த்ய பூநிகேதனகா:

“அவளது சக்திகளான அணிமா முதலியவை அழகிய பெண்ணுருவைப் பெறுகின்றனர், அவர்களைப் பிற வழிகளிலும் அடையலாம்.  இரு தரமானவைகளாக அவை இருப்பதால் அவை பூபுரத்தின் கடைசி பகுதியில் இருக்கின்றனர்.

விளக்கவுரை:
தேவியின் எட்டு சக்திகள் அணிமா, லகிமா, மகிமா, ஈஷித்வம் வசிஷ்த்வம், பிரகாம்யம், புக்தி, இச்சா, ப்ராப்தி, சர்வகாமா என்பவை.


அவற்றை ஹத யோகம் போன்ற பிற வழிகளிலும் பெறலாம்.  அதனால் அவை குணங்களாக இருக்கின்றன. அவற்றை மோட்சத்தைவிட தரம் தாழ்ந்தவையாகக் கருத வேண்டும்.  அதனால் அவை பூபுரத்தின் கடைசி தளத்தில் உள்ளன. பரமாத்மாவை இவ்விதமாக வழிபடுவதன்மூலம் ஒரு சாதகன் தானே பரமாத்மாவாகிறான்.

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.