Friday, 21 July 2017

33. Lotus petals

Verse 33
Kaadibhi: ashtabhirupa chitam ashtadalaabjam ca vaikharee vargai:
Svara gana samuditam etat dvyastadala ambhoruham ca sanchintyam

“The eight groups of letters beginning with the ka group which are vaikhari sakthi are on the petals of the lotus of eight petals and it should always be born in mind (meditated upon) that the lotus of sixteen petals has on its petals the vowel letters.”

Commentary:
The sarva sankshobhana chakram and sarvaasaa paripooraka chakram are described here with the letters that are present there.

The eight groups of letters are the ka varga, cha varga etc we saw before. 
The vowels are present on the sixteen petals. 

காதிபி: அஷ்டபிரூப சிதம் அஷ்டதளாப்ஜம் ச வைகரீ வர்கை:
ஸ்வர கண சமுதிதம் ஏதத் த்வியஷ்டதள அம்போருஹம் ச சந்சிந்த்யம்

“வைகரீ சகதியான க வர்க்கம் முதலான எட்டு எழுத்து வர்க்கங்கள் எட்டு இதழ்களையுடைய தாமரை இதழ்களிலும் பதினாறு இதழ்களையுடைய தாமரை இதழ்களில் பதினாறு உயிரெழுத்துக்கள் உள்ளன என்று தியானிக்க வேண்டும்.”


விளக்கவுரை: 
சர்வ சங்க்ஷோபன சக்கரம் மற்றும் சர்வ ஆசாபரிபூரக சக்கரம் ஆகியவை இங்கு விளக்கப்படுகின்றன. 

32. Vaikhari

Verse 32
Parayaa pashyanthi api madhyamayaa sthoola varna roopinyaa
Ethaabhi: eka panchaashath aksharaatmikaa vaikhari jaathaa.

“Para, pashyanthi and madhyama are her gross forms.  By these three is produced vaikhari who is the fifty-one letter of the alphabet.”

Commentary:
Vaikhari, consisting of the fifty one letters starting from a and ending in ksha, is the grossest form that results in the manifested universe.
Para is the energy, pashyanthi is the subtle form, madhyama is both subtle as well as gross form and vaikhari is completely the gross form.

பராயா பஷ்யந்தி அபி மத்யமயா ஸ்தூல வர்ண ரூபிண்யா
ஏதாபி: ஏக பஞ்சாசத் அக்ஷராத்மிகா வைகரி ஜாதா

“பரா, பஷ்யந்தி மற்றும் மத்யமா, அவளது ஸ்தூல ரூபங்கள்.  இவை மூன்றிலிருந்தும் ஐம்பத்தொரு எழுத்துக்களைக் கொண்ட வைகரி பிறக்கிறது.”

விளக்கவுரை:
அ முதல் க்ஷ வரை உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களைக் கொண்டது வைகரி. அதுவே வெளிப்பாடுடைய உலகமாகப் பரிமளிக்கிறது. 

சப்தத்தின் நான்கு நிலைகளைப் பார்த்தால் பரா என்பது சக்தி நிலை, பஷ்யந்தி சூட்சும நிலை, மத்யமா சூட்சும மற்றும் ஸ்தூல நிலை, வைகரி ஸ்தூல நிலை மட்டுமே.  

Tuesday, 18 July 2017

31. Sarva saubhagya dhaayaka chakram

Verse 31
Etaccakra chatushka prabhaasa metam dashaara parinaama:
aadisvaragaNagata- catur-dashaavarNa mayam chaturdashaaram abhoot

“The light of the first four chakras is the fully evolved chakra of ten triangles.  Then appeared the chakra of fourteen triangles that contains the fourteen vowels beginning with A.”

Commentary:
The four chakras are bindu, trikona, eight triangled and inner ten triangled chakras.  The outer chakra of ten triangles is described as fully evolved. 
The fourteen triangled chakra contains the fourteen vowels that begin with “a”.  This chakra is called sarva saubhagya daayaka.

ஏதக்சக்ர சதுஷ்க பிரபாஸ மேதம் தசார பரிணாம:
ஆடிஸ்வரகணகத சதுர் தசாவர்ணமயம் சதுர்தசாரம் அபூத்

பத்து கோணங்களைக் கொண்ட, பூரண வெளிப்பாடுடைய சக்கரம் முந்தைய நான்கு சக்கரங்களின் ஒளியாகும். இதன் பிறகு பதினான்கு கோணங்களைக் கொண்ட, அகாரம் முதலான உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் தோன்றுகிறது.”

விளக்கவுரை:

இப்பாடலில் குறிப்பிடப்பட்ட நான்கு சக்கரங்கள், பிந்து, முக்கோணம், எட்டு கோண சக்கரம், உள் பத்து கோணச் சக்கரம் என்பவை.  பூரண வெளிப்பாடுடைய சக்கரம் வெளி பத்து கோண சக்கரம்.  பதினான்கு கோணங்களைக் கொண்ட, உயிரெழுத்துக்களைக் கொண்ட சக்கரம் சர்வ ஸௌபாக்யதாயக சக்கரம் எனப்படும்.

Tuesday, 11 July 2017

29, 30 All the letters

Verse 29,30
Saśapavargamayam tadvasukonam madhya kona vistaara:
Navakonam madhyam cetyasmimshichiddeepadeepite dasake
Tacchaayaa dvitayamidam dashaara chakra dvayaatmanaav itatam
Tadacakavarga catushtaya vilasanavispashtakona vistaaram


“The chakra of eight triangles consisting the letters sa,śa, sha and the pa varga is an expansion of the middle triangle.  These nine triangles together with the bindu make the ten which are lighted by the light of chith (chith deepa).  The two lights of these ten are spread forth as two chakras of ten triangles each of which the inner ten triangles display the tha varga and the ta varga and the outer ten trianges display the cha varga and ka varga.”

Commentary:
This verse talks about the emergence of the vaikari sakthi in terms of the triangles that emerge from the light and energy of the middle triangle.
The chakra of eight triangles called the sarva roga hara (destroyer of all diseases) contains the eight letters, sa, śa, sha and the pa varga.  This is the expansion of the middle triangle.  Thus there are totally nine triangles and when the bindu is included it becomes ten.  This group is illuminated by the light of chith, the light of consciousness, the rays that surround Tripura the mother seated at the bhindu chakra.  She is light herself.  The two lights are the fire of dissolution (samvarta anala) and chith kala.  The samvarta anala is the fire of pralaya, the all devouring Kaalaagni Rudra.  Chith kala is Tripura.

The two lights of fire and chith kala spread as the two chakras of ten triangles each.  They are called sarva rakshaakara (all protector) and savartha saadhaka (all accomplisher).  The inner triangle has the tha and ta varga while the outer triangles have the cha and ka varga.

ஸசப வர்கமயம் தத்வசுகோணம் மத்ய கோணவிஸ்தார:
நவகோணம் மத்யம் சேத்யஸ்மிம்ச் சித் தீப தீபிதே தசகே
தத் சாயா த்விதயமிதம் தசார சக்ர த்வயாத்மனாவ இததம்
தடசக வர்க்க சதுஷ்டய விலசனவிஸ்பஷ்டகோண விஸ்தார்ணம்

எட்டு கோணங்களைக் கொண்ட, ஸ,ச,ஷ மற்றும் ப வர்க்கம் எழுத்துக்களைக் கொண்ட கோணம் மத்திய கோணத்தின் விரிவு ஆகும்.  இவ்வாறு மத்திய கோணத்தையும் சேர்த்து ஒன்பது கோணங்களும், பிந்துவுடன் சேர்த்து பத்து கோணங்களாகவும் இருக்கும் இது சித்தின் தீபத்தினால் ஒளியூட்டப்படுகிறது.  இந்த பத்து கோணங்களின் இரு ஒளிகள் இரண்டு பத்து கோணங்களாக விரிவடைகின்றன.  அவற்றில் உள்பத்துக்கோணம் ட மற்றும் த வர்க்கத்தையும் வெளியிலுள்ள பத்துக் கோணங்கள் ச மற்றும் க வர்க்க எழுத்துக்களையும் கொண்டுள்ளன.”

விளக்கவுரை:
இப்பாடல் கோணங்களாக எழும் வைகரி சக்தியின் தோற்றத்தைப் பேசுகிறது.  இது மத்திய முக்கோணத்தின் ஒளி மற்றும் சக்தியிலிருந்து தோன்றுகிறது.
எட்டு கோணங்களைக் கொண்ட உருவம் சர்வ ரோக ஹரா எனப்படுகிறது.  இது ஸ, ச, ஷ மற்றும் ப வர்க்க எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது மத்திய முக்கோணத்தின் விரிவு.  இவ்வாறு மத்திய கோணத்தைச் சேர்த்து ஒன்பது கோணங்களும் பிந்துவையும் சேர்த்து பத்து கோணங்களையும் உடைய உருவம் உள்ளது.  இது சித்தின் ஒளியால் ஒளியூட்டப்படுகிறது.  இந்த ஒளிக் கதிர்கள் பிந்துவில் அமர்ந்திருக்கும் திரிபுராவைச் சூழ்ந்திருக்கும் ஒளியாகும்.  அவளே ஒளியாவாள்.  இரு ஒளிகள் என்பது பிரளய காலத் தீ மற்றும் சித் கலா.  இவற்றில் சம்வர்த்த அனலம் எனப்படும் பிரளயத்தீ காலாக்னி ருத்திரன், சித் கலா திரிபுரா. 


காலாக்னியும் சித்கலாவும் பத்து கோணங்களைக் கொண்ட இரண்டு சக்கரங்களாக விரிகின்றன.  அவை சர்வ ரக்ஷாகரா மற்றும் சர்வார்த்த சாதகா என்றும் அழைக்கப்படுகின்றன.  உள்ளே இருக்கும் கோணங்கள் ட மற்றும் த வர்க்கத்தையும் வெளியே இருக்கும் கோணங்கள் ச மற்றும் க வர்க்கங்களையும் கொண்டுள்ளன. 

Monday, 10 July 2017

28. Relationship between subtle and gross madhyama

Verse 28
Aadhyaa kaaranam anyaa kaaryam tvanayo: yatastato heto:
Saeeveyam nahibedhastaatmyam hetu hetumadabesshtani

“The first (aadhyaa- subtle madhyama) is the cause (kaarana) and the other (gross madhyama) is the effect (kaaryam).  The latter (subtle) is the same as the former (gross).  There is verily no difference between the two for the identity of cause (hetu) and effect (hetumat) is axiomatic (dishta).”

Commentary:

The subtle madhyama is the cause for the gross madhyama.  They are related as cause and effect and hence are identical.

ஆத்யா காரணம் அன்யா கார்யம் த்வனயோ: யதஸ்ததோ ஹேதோ:
சயீவேயம் நஹிபேதஸ்தாத்ம்யம் ஹேது ஹேதுமதபீஷ்டானி

முதலில் இருப்பது காரணம் (சூட்சும மத்யமா) அடுத்து இருப்பது (ஸ்தூல மத்யமா) காரியம்.  முதலில் இருப்பது அடுத்து இருப்பதே. அவர்களுக்கிடையே எவ்வித வித்தியாசமும் இல்லை.  ஏனெனில் அவை காரண காரியங்கள் என்ற உறவைக் கொண்டுள்ளன.”

விளக்கவுரை:


சூட்சும மத்யமாவிலிருந்து ஸ்தூல மத்யமா தோன்றுகிறது.  அவை காரண காரியங்கள் என்ற தொடர்பைக் கொண்டுள்ளன.

26. Pashyanthi and madhyama

Verse 26
Ekaa paraa tadanyaa vaamaadi vyaashti maatr Srishti atma
Tena navatmaa jataa maataa saa madhyamaaabhidhaanaabhyaam

Dvividhaahi madhyamaa saa sookshmaa stoola aakritisthitaa sookshmaa
Navanaadamayee sthoolaa nava vargaatmaa ca bhoota lipi atma

 “She who is next to paraa (pashyanthi) is the creative self (srishyatma) out of which originated the individual mothers (vyashti maatr) Vama and others.  By this she became ninefold form (nava atma).  She, the mother Madhyamaa, is shown by her two names of two kinds (dvividhaa)- subtle (sookshma) and gross forms (shoolaariti).  As subtle she is ever existent and the nine sounds (nava nadha mayi).  As gross she is the nine groups (of letters) and has the name bhoota lipi.”

Commentary:

Para manifests as her next stage, Pashyanthi.  As Pashyanti, she is present as ninefold aspects and forms the nine triangles of the Srichakra (nava yoni chakraatmana).  As pashyanthi gives rise to the nine saktis beginning with Vama and ending with Santhaa, she is called the mother.  Vama is the producer of the universe, Jyeshta is all -beneficient (Siva mayi), Raudri destroys or dispels all ailments and burns up the fruits of all actions. Ambika grants all things desired.  She is the impuse to becoming, She is the Paraa vaak, Maha satta.  Saantaa is the all-pervading chinmaya sakthi.  She is transcendental, actionless and tranquil.

The next verse speaks of Madhyama.  It has ninefold character.  It is the state of union of Para and Pashyanthi.  She is visible or realizable by yogin whose minds are turned inwards (antarmukha).  This shakti exists as two forms- subtle and gross.  Her subtle form is perceived in samadhi.  As gross she is perceived as letters of the alphabet.  In the subtle form she is the nine sounds or Nada.  In the gross form, she is the nine groups of letters of the alphabet.  They are A, ka, ca, ta,tha, pa, ya, sa and la.

ஏகா பரா ததன்யா வாமாதி வ்யஷ்டி மாத்ரு ஸ்ருஷ்டி ஆத்மா
தேன நவாத்மா ஜடா மாதா ஸா மத்யம அபிதானாப்யாம்

த்விவிதாஹி மத்யமா ஸா சூக்ஷ்மா ஸ்தூல ஆக்ரிஸ்திதா சூக்ஷ்மா
நவநாதமயி ஸ்தூலா நவ வர்காத்மா ச பூதலிபி ஆத்மா

“பராவுக்கு அடுத்து இருப்பவள் ஸ்ருஷ்டி ஆத்மா, அவளிடமிருந்து வாமை முதலிய ஒன்பது மாதாக்கள் தோன்றுகின்றனர்.  இதனால் அவள் ஒன்பது உருவங்களைக் கொண்டவளாக மாறுகிறாள்.  மத்யமா என்ற அடுத்த நிலையை அடையும் அவள் இருவிதமான பெயர்களைக் கொண்டுள்ளாள்.  சூட்சும உருவில் அவள் எப்போதும் இருப்பவளாக ஒன்பதுவித சத்தங்களாக இருக்கிறாள்.  ஸ்தூல உருவில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாக இருந்து பூதலிபி என்று அழைக்கப்படுகிறாள்.”

விளக்கவுரை:

பராவின் அடுத்த நிலை பஷ்யந்தி.  அந்த நிலையில் அவள் ஒன்பது விசேஷங்களாக இருக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முக்கோணங்களாக (நவ யோனி சக்ராத்மனா) இருக்கிறாள். வாமை முதல் சாந்தா வரை அவளிடமிருந்து தோன்றுவதால் அவள் மாதா எனப்படுகிறாள்.  வாமை உலகைப் படைக்கிறாள். ஜ்யேஷ்டா உலகைக் காக்கிறாள் (அவள் சிவமயி) ரௌத்ரி அனைத்தையும் அழிக்கிறாள், எல்லா நோய்களையும் ஒழிக்கிறாள், எல்லா செயல்களின் பலன்களையும் எரித்து விடுகிறாள்.   அம்பிகை எல்லா விருப்பங்களையும் அருளுகிறாள்.  அவளே பராவாக், மகா சத்தா. சாந்தா என்பவள் எங்கும் பரந்திருக்கும் சின்மய சக்தி.  அவள் செயலைக் கடந்தவளாக, அனைத்தையும் கடந்தவளாக அமைதியின் உருவமாக இருக்கிறாள்.


அடுத்த பாடல் மத்தியமாவைப் பற்றிப் பேசுகிறது.  அது ஒன்பது குணங்களைக் கொண்டதாக இருக்கிறது.  அந்த நிலை, பராவும் பஷ்யந்தியும் ஐக்கியமடைந்த நிலை.  தமது மனத்தை உள்நோக்கித் திருப்பி அந்தர்முகமாக்கிய யோகிகள் அவளைக் காண்கிறார்கள்.  இந்த சக்தி இரு நிலைகளில்- சூட்சும மற்றும் ஸ்தூல நிலைகளில், இருக்கிறாள்.  அவளது சூட்சும நிலையை சமாதியில் காணலாம்.  ஸ்தூல நிலையில் அவள் ஒன்பது எழுத்து வர்க்கங்களாகக், அ, க, ச, ட, த, ப, ய, ஸ, ல, காணப்படுகிறாள்.  சூட்சும நிலையில் அவள் ஒன்பது வித சத்தங்களாக, நாதமாகக் காணப்படுகிறாள். 

Sunday, 2 July 2017

25. White, red and mixed

Verse 25
Evam kaamakalaatmaa tri bindhutativavaroopa  varnamayi
Syam trikona roopam yaataa triguna svaroopini maataa.
“In this way the united Kama and kala are three letters whose own form is the three bindhus.  It is she who is the mother who manifests as the three qualities and who assumed the form of the triangle.”

Commentary:
Kama means prakasha, the Parama siva and the first letter which is A.  Kala is the vimarsha is the last letter, ha.  The three bindus are the red, white and misra.  The three letters are vagbhava, kamaraja and sakthi. The red is the self-sustained bindu, Siva.  The white is its beloved.  Their union is the mixed bindhu.  The union is the pure state which is nivana. 

By saying saa iyam the author points out that she is the one who is experienced as the Atma, the witness, by yogs who experience universal consciousness. She manifests as satvam, rajas and tamas.  She is the chakra, sarva siddhi pradaayaka, created by the union of a with iccha, I. She is matha, the mother as she creates everything.

ஏவம் காமகலாத்மா த்ரி பிந்து தத் இவ ரூப வர்ணமயி
ஸ்யம் த்ரிகோண ரூபம் யாதா த்ரிகுண ஸ்வரூபிணி மாதா.

இவ்வாறு ஐக்கியமான காமா மற்றும் கலா, மூன்று பிந்துக்களைத் தமது உருவமாகப் பெற்ற மூன்று எழுத்துக்கள்.  அவளே மூன்று குணங்களாக வெளிப்படுபவள், முக்கோண உருவை எடுத்துக்கொள்ளும் மாதா.

காமா என்றால் பிரகாசம், பரம சிவம், அ என்னும் முதலெழுத்து.  கலா என்பது விமர்சம், ஹ என்ற கடைசி எழுத்து.  அவர்களது ஐக்கியம் மூன்று பிந்துக்களாகக் குறிக்கப்படுகிறது. சிவப்பு என்பது நிராதாரமாக இருப்பது. வெள்ளை என்பது அதன்  இணை. அவர்களது ஐக்கியம் மிஸ்ர பிந்துவைத் தோற்றுவிக்கிறது.  இந்த ஐக்கியம் உச்ச புனித நிலை, நிர்வாணம்.


சா இயம் என்பதன் மூலம் ஆசிரியர்சக்தியான அவளே ஆத்மாவாக, சாட்சியாக, பரவுணர்வைப் பெற்ற ரிஷிகளால் உணரப்படுகிறாள் என்று காட்டுகிறார். அவளே சத்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களாக இருந்து சிருஷ்டியை ஏற்படுத்துகிறாள், அதனால் அவளே தாய். அவள் சர்வ சித்திப்பிரதா என்ற சக்கரம்.  அது அ என்னும் இறைமை இ என்னும் இச்சையுடன் ஐக்கியமடையும்போது ஏற்படுகிறது.

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.