Saturday, 17 June 2017

21. Devi and Chakra are identical in both, gross and subtle forms


Verse 21
Chakrasyaapi maheshyaa na bedhalesho, pi bhaavyathe vibudhai:
Anayo: sookshma aakaaraa paraiva saa sthoolayo: ca kaapi bhidaa.
“The wise know that there is no difference between Maheshi and the chakra. Para herself is the subtle form of both of these. Hence, there is no difference between them in the gross form also.”
Commentary:
This verse also emphasizes that there is no difference between Devi, her knowledge and her chakra.
 Tripuraa Mahopanishad says She was one as in the bindu-chakra and became nine-fold in the nine triangles of the Srichakra.
Vamakeshvara tantra says the five shaktis produce, the four fires withdraw. From the union of the five Shaktis and four fires there arises the chakra. The chakra is the form of the Kama kala in that it is the expansion of the Supreme Reality.
The srichakra in its subtle form is the bindu. It is indefinable like the Devi. It is the parama akasha. Similarly, in their gross form chakra is the expansions beginning with the trikona and ending with chaturasra (square). Devi gradually unfolds from Tripura Ambika to Tripura Shakti.
As Para, the Adishakti is the subtle form of both, the chakra and Devi, there is no difference between them.
Thus, the chakra is the form of the Devi.
சக்ரஸ்யாபி மகேஷ்யா ந பேத லேஷோ பி பாவ்யதே விபுதை:
அனயோ: சூக்ஷ்ம ஆகாரா பரைவ ஸா ஸ்தூலயோ: ச காபி பிதா
“மகேஷிக்கும் சக்கரத்துக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இவை இரண்டுக்கும் சூட்சுமமாக இருப்பவள் பரா. அதனால் அவர்களுக்கு இடையே ஸ்தூல நிலையிலும் எவ்வித வேறுபாடும் இல்லை.”
விளக்கவுரை:
இப்பாடலும் தேவிக்கும் அவளது சக்கரத்துக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்று வலியுறுத்துகிறது.
திரிபுரா மகோபநிஷத்தில், “அவளே பிந்து அவளே ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முக்கோணங்களாகிறாள்,” என்று கூறப்படுகிறது
வாமகேச்வர தந்திரத்தில், “ஐந்து சக்திகள் ஸ்ரிஷ்டிக்கின்றனர் நான்கு தீக்கள் லயமடையச் செய்கின்றன. இவையிரண்டும் சேரும்போது ஒன்பது முக்கோணங்கள் கொண்ட சக்கரம் தோன்றுகிறது. இந்தச் சக்கரம் காமகலாவின் ரூபம், இறைவனின் விரிவைக் காட்டுவது,” என்று காணப்படுகிறது.
ஸ்ரீ சக்கரத்தின் சூட்சும உருவம் பிந்து. அது தேவியைப் போல விளக்க முடியாதது. அதுவே பரம ஆகாசம். அதேபோல் அவர்களைது ஸ்தூல நிலையில், சக்கரம் திரிகோணங்களில் தொடக்கி சதுரத்தில் முடிகின்றது. தேவியும் திரிபுரா அம்பிகாவில் தொடங்கி திரிபுர சக்தியில் முடிகிறாள். இவர்கள் இருவருக்கும் சூட்சுமமாக இருப்பது பரா எனப்படும் ஆதிசக்தி. அதனால் தேவியும் சக்கரமும் ஒன்றே.

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.