Sunday, 14 May 2017

3. She is the seed and the sprout

Verse 3
Sphuta sivasakthi samaagama bija ankura roopini paraasakthi:
Anutara roopa anuthara vimarsa lipilaksya vigrahaa bhaati.

Commentary: 
“She is the supreme (paraa) shakti.  She is the manifested union (sphuta) of Siva and Sakthi and is therefore both, the seed and the sprout.  Her form is very subtle (anutara roopam). She is known (lakshya) by the union of the letter before which there is no other letter (anutara lipi) and the last letter (vimarsa lipi).” 

If Shakti is vimarsa or awareness then how can she be the Brahman who recognizes himself?  This verse explains it.

She is the supreme (paraa) and is thus Tripurasundari.  By saying that she is both, the seed and the sprout, Punyananda tells us that she is both the siva principle and the sakthi principle.  From the seed emerges the sprout and from the sprout the seed. The expression that she is the union of Siva and Sakthi conveys the idea that she is both jnana sakthi and kriya sakthi. The world is created by these two saktis.  Her form is subtle (anuttara rupa).  Anuttara lipi refers to the letter A, the vimarsa lipi to the letter Ha.  Thus Devi becomes known by the union of A and Ha, or Aham. She is the embodiment of all the 51 letters.

ஸ்புட சிவசக்தி சமாகம பீஜஅங்குர ரூபிணி பராசக்தி:
அனுத்தர ரூப அனுத்தர விமர்ச லிபி லக்ஷ்ய விக்ரஹ பாதி.

விளக்கம்:

“அவளே பரா சக்தி. அவள் சிவசக்தி ஐக்கியத்தால் (ஸ்புட) வெளிப்படுவதால் அவளே பீஜமாகவும், முளையாகவும் இருக்கிறாள்.  அவளது ரூபம் மிகவும் சூட்சுமமானது (அனுத்தர ரூபம்), எந்த எழுத்துக்கு முன் வேறு எழுத்து இல்லையோ அதுவும் விமர்ச்ச லிபியும் இணைவதால் உணரப்படுகிறது.”

சக்தி தான் என்னும் உணர்வு என்றால் அந்த உணர்வை அனுபவிக்கும் பிரம்மமாக அவள் எவ்வாறு இருக்கமுடியும்? இதற்கு இப்பாடல் பதில் கூறுகிறது.


அவளைப் பராசக்தி என்பதன் மூலம் அவள் த்ரிபுரசுந்தரி என்று புண்யானந்தர் குறிப்பிடுகிறார்.  அவளே பீஜமும் முளையும் என்பதன் மூலம் அவளே சிவதத்துவமாகவும் சக்தி தத்துவமாகவும் இருக்கிறாள் என்றும் அவர் கூறுகிறார். விதையிலிருந்து முளை தோன்றுகிறது, முளையிலிருந்து விதை தோன்றுகிறது.  அவள் சிவ சக்தி தத்துவங்கள் என்பதால் அவளே ஞான சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது.  உலகம் இந்த இரண்டு சக்திகளின் ஐக்கியத்தால் தோன்றுகிறது.  அவளது உருவம் சூட்சுமமானது (அநுத்தர ரூபம்) அனுத்தர லிபி என்பது அ என்னும் எழுத்து, விமர்ச லிபி என்பது ஹ என்னும் எழுத்து.  இவ்வாறு அகம் என்ற சொல்லால் அவளது உருவம் அறியப்படுகிறது.  இவ்வாறு அவள் சமஸ்கிருதத்தின் முதலெழுத்தான அ முதல் ஹ வரை உள்ள 51  எழுத்துக்களை உள்ளடக்கியவளாக, அவை குறிக்கும் தத்துவங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். 

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.