Saturday, 13 May 2017

2. She is the mirror

Verse 2

Saa jayati saktiraadyaa nijasukhamaya nirupamaakaaraa
Bhaavi caraacara bheejam sivaroopa vimarsa nirmalaa darsa:

Commentary:
“She is the Supreme Sakthi who excels all and who, by nature, is eternal, limitless bliss, is the seed or cause of all the moving and motionless.  She is the pure mirror in which Siva experiences himself.”
By calling her the Supreme Sakthi Sri Punyanandha tells us he is referring to Maha Tripura Sundari. Her natural state is nija sukham or natural bliss at all times.  She is incomparable, such is her nature (aakaara).

Bhaavi- that which is about to come and will come.  Caracara- mobile and immobile. Beejam- seed.

Sakthi is the mirror that reflects Siva.  If there is no mirror there is no reflection.  If there is no object the mirror does not reflect anything.  Thus, both, Siva the object and the mirror, Sakthi, are required for the universe to emerge.

சா ஜயதி சக்திராத்யா நிஜசுகமயநிருபமாகாரா
பாவிச் சராசார பீஜம் சிவரூபவிமர்சநிர்மலாதர்ச: (2)

அவளே ஒப்புயர்வற்ற உச்ச சக்தி, இயற்கையாக அவளது தன்மை நித்திய அளவற்ற ஆனந்தம்.  அவளே அசைவன அசையாதன ஆகியவற்றின் விதை.  அவளே சிவன் தன்னை அறிந்துகொள்ளும் தூய கண்ணாடி”.

அவளை உச்ச சக்தி என்று அழைப்பதன் மூலம் ஸ்ரீ புண்யனந்தர் தான் மகா த்ரிபுர சுந்தரியைக் குறிக்கிறோம் என்றும் உணர்த்துகிறார்.  அவளது இயற்கைத் தன்மை நிஜ சுகம்.  அவள் இனி வரப்போவனவற்றிற்கு விதை. 


சக்தி கண்ணாடியாக இருக்க சிவன் அவள் மூலம் தன்னை உணர்கிறார்.  கண்ணாடியில்லாவிட்டால் எதிரில் இருக்கும் பொருள் பிரதிபலிப்பதில்லை.  அதேபோல் ஒரு பொருள் இல்லாவிட்டால் கண்ணாடியால் எதையும் காட்டமுடியாது.  இவ்வாறு சக்தி (கண்ணாடி), சிவன் (பிரதிபலிக்கப்படும் பொருள்) இருவருமே பிரபஞ்சம் தோன்ற அவசியம் தேவை.  இவ்வாறு ஸ்ரீ புண்யானந்தர் உலகைப் படைப்பது சக்தி மட்டுமே என்ற எண்ணத்தைத் தவறென்று காட்டுகிறார்.

Friday, 12 May 2017

1. May the Lord protect you

Kamakala vilasam
Sri Punyananda natha

Verse 1

Sakala bhuvana udaya sthithi laya maya leelaavinodana udyuktah
Antarleena vimarshah paatu mahesha prakaasa maatra tanuh

Commentary:

“May the Lord, who is ever wakeful during the wonderful play of creation, sustenance and dissolution of all the worlds which issue from him, protect you.  He is the effulgence (prakasa).  Merged in him is the awareness (vimarsa).”

The Lord’s five acts, creation, sustenance, dissolution, concealment and bestowal of grace are called pancha kriya.  They are his divine play as they are not done for a particular benefit (prayojanam). The worlds are called bhuvana as they emerge from him (bhavat yasmaat iti bhuvanam).  Thus, the bhuvana represent all the principles from Siva to bhumi and thus represent Brahman. Hence the Brahman is both, the material as well as willing cause of the universes.

Prakasha and vimarsa are the two states of the Lord the former being sat or existence and the latter the chith or awareness.  Prakasa is the inactive Siva principle while vimarsha is the active Sakthi principle. Awareness is both within (antharmukha) as well as towards outside (bahirmukha).  It is the light of consciousness or the recognition of the state of “that” or idam.  When it is inward is called paripurna ahantha or perfect, I-sense.

The Divine is called Mahesa or great lord as he is not limited by space or time and also because he has the power to control all (Isa). 

During Srividya upasana the Devata, Guru and Mantra are all contemplated at the bindu.  This verse praises all the three.  The term mantra means that which protects the one who thinks it.  Thus mantra has the power of illumination. Guru is also the prakasa as he confers jnana to the aspirant.

சகல புவன உதய ஸ்திதி லய மாயா லீலா விநோதன உத்யுக்த
அந்தர்லீன விமர்ச பாது மகேச பிரகாச மாத்ர தனு  (1)

எல்லா உலகங்களையும் தனது வினோத மாயையால் தன்னிடமிருந்து படைத்து, காத்து அழிக்கும் விளையாட்டை விளையாடும், எப்போதும் விழிப்புடன் இருக்கும் இறைவன் உம்மைக் காக்கட்டும்.  அவர் சோதி வடிவமானவர் (பிரகாசம்), அவரிடம் கலந்திருப்பது உணர்வு (விமர்சம், சக்தி).

இறைவனின் ஐந்து செயல்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பவை பஞ்சகிரியா எனப்படுகின்றன.  இவையனைத்தும் அவரது லீலை அல்லது விளையாட்டு ஏனெனில் அவை எவ்வித பிரயோசனத்தையும் எதிர்பார்த்துச் செய்யப்படுவதில்லை.  இறைவனிடமிருந்து தோன்றுவதால் உலகம், புவனம் எனப்படுகிறது (பவத் யஸ்மாத் இதி புவனம்).  இவ்வாறு, பிரம்மம் குறிக்கும் எல்லா தத்துவங்களையும் (சிவம் முதல் பூமி வரை) உள்ளடக்கியதே புவனம். அது பிரம்மமன்றி வேறில்லை.  பிரம்மமே உலகின் உபாதான காரணமாகவும் (கச்சாப் பொருள்) நிமித்த காரணமாகவும் (இச்சை சங்கல்பம்) இருக்கிறது.

பிரகாசம் விமர்சம் என்பது இறைவனின் இரு நிலைகளைக் குறிக்கின்றது.  பிரகாசம் என்பது சத் அல்லது இருப்பு, விமர்சம் என்பது உணர்வு அல்லது சித்.  இவ்வாறு பிரகாசம் என்பது சிவமாகவும் விமர்சம் என்பது செயல்பாடான சக்தியாகவும் இருக்கின்றன.  இந்த உணர்வு என்பது உள்நோக்கியதாகவோ (அந்தர்முகம்) வெளி நோக்கியதாகவோ (பஹிர்முகம்) இருக்கலாம்.  வெளி நோக்கி இருக்கும்போது “இதம்” அல்லது “இது” என்று அது உலகை அறிகிறது. உள்நோக்கியிருக்கும்போது அது தன்னை அறிகிறது.  அப்போது அது பரிபூரண அகந்தா அல்லது தான் என்னும் உணர்வு எனப்படுகிறது.

இப்பாடலில் இறைவன் மகேசன் என்று அழைக்கப்படுகிறார்.  அவர் காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படுத்தப்படாதவர் என்பதையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய சக்தியைப் பெற்றவர் என்பதையும் இது குறிக்கிறது. 


ஸ்ரீவித்யா உபாசனையின்போது தேவதா, குரு, மந்திரம் ஆகிய மூன்றும் பிந்துவில் தியானிக்கப்படுகின்றன.  இவ்வாறு தேவதையைத் தவிர குருவும் மந்திரமும் பிரகாச விமர்சங்களாக இருக்கின்றனர்.  மந்திரம் என்றால் தன்னை நிலைப்பவரைக் காப்பது என்று பொருள்.  குருவும் பிரகாசம் ஏனென்றால் அவர் ஞானத்தை வழங்குகிறார்.  இவ்வாறு புண்யானந்தர் தேவதா, குரு மற்றும் மந்த்ரம் என்ற மூன்றையும் இப்பாடலில் துதிக்கிறார்.

Thursday, 11 May 2017

Kamakala

What is Kamakala?

Lalitha is the Supreme Shakti aspect of Brahman.  Her presence occurs as the first display of activity in the Brahman.  She holds absorbed in herself all the principles of tattva of which the universe with all its varieties is composed of.  She remains for some time in this state holding the tattva within herself until the rest is disturbed by the will or desire (kama) to create.  The movement of this desire manifests as the Kamakala. 

Sakthi’s state where she holds all the principles within is called the bindu. It is the state of potentiality.  This bindu manifests as the primary triangle or kamakala which represents the three entities, sun, moon and fire.  Gandharva tantra mentions that the sun bindu is Devi’s face, moon and fire bindu her two breasts and her womb or yoni is the Haardhakala. 

The second aspect of kamakala is her presence as kundalini extending from muladhara to brahmarandhra.  She is meditated upon as half of Ha in the lotus of the sahasrara.  She is the awareness or jagrit in everything, moving and motionless.

Kamakala is the mantra body (mantra tanu), Trayimayi that exists in everything.  The Samaveda is her face, rik and yajus are her two breasts and Atharvaveda is the haardakala.  Kamakala is the turya or the highest Brahman itself.

During dissolution or pralaya, the reverse of evolution, only Devi remains.  All the tattva or principles are absorbed or swallowed (kabaleekrutha) by her.  When she remains in this state she is sukshma siva or nishkala siva who is without a name or form but a mere potentiality. 
The Sakthi sangama tantra equates the Kamakala, the first creative movement, to Pranava.

The aim of a Srividya sadaka is realizing his identity with kamakala. He realizes his identity first with the yantra and mantra and then with Lalitha or the Mahasakthi.  She is the cit sakthi which is her power to appear as many, thus she is responsible for her maya sakthi.  Her parinama or evolution is the prapancha or universe.  The form of this parinama is cidrupa or form of consciousness.  Thus, Sakthi and the possessor of shakti or sakthiman-the cit are not different. 

Sakti sadhana or worship of Srichakara is a process whereby the identity of the knower, the Jiva, the knowledge, the yantra which is the body of the seeker as well as the Devi, and the object of knowledge, Tripura, is realized. 

காமகலா என்றால் என்ன?

பிரம்மத்தின் உச்ச சக்தி நிலையே லலிதா அல்லது மகாத்ரிபுரசுந்தரி.  பிரம்மத்தில் முதல் செயல்பாடு தோன்றும்போது அவள் இருப்பைப் பெறுகிறாள்.  இந்தப் பிரபஞ்சமாக விரியும் எல்லா தத்துவங்களையும் தன்னுள் அடக்கியவளாக அவள் இருக்கிறாள்.  அவளது இந்த நிலை படைப்பைத் தொடங்க வேண்டும் என்ற முதல் இச்சை அல்லது காமம் தோன்றும் வரை நிலைத்திருக்கிறது. இந்த இச்சை எனப்படும் முதல் அசைவு காமகலையாக வெளிப்படுகிறது.
எல்லா தத்துவங்களையும் உள்ளடக்கிய சக்தியின் வெளிப்பாட்டுக்கு முற்பட்ட நிலை பிந்து எனப்படுகிறது. அது அனைத்து வெளிப்பாடுகளையும் தன்னுள் விதை நிலையில் வைத்திருக்கிறது.  இந்த பிந்து அல்லது புள்ளி, முதலில் ஒரு முக்கோணமாக விரிகிறது.  கந்தர்வ தந்திரம் இந்த முக்கோணமே காமகலா என்று குறிப்பிட்டு சூரிய பிந்து சக்தியின் முகம், சந்திர மற்றும் அக்னி பீஜங்கள் அவளது மார்புகள் என்றும் அவளது யோனி ஹார்தகலா என்றும் குறிப்பிடுகிறது.

காமகலாவின் மற்றொரு உருவம் சக்தி குண்டலினி.  அவள் மூலாதாரத்திலிருந்து பிரமரந்த்ரம் வரை விரிகிறாள். ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சஹஸ்ராரத்தில் அவள் ஹ என்னும் எழுத்தின் பாதியாக தியனிக்கப்படுகிறாள்.  அவளே எல்லா அசைவுகளிலும் அசைவின்மையிலும் விழிப்புணர்வாக இருக்கிறாள்.

காமகலையே எல்லாப் பொருள்களிலும் மந்திர மேனியாக (மந்த்ர தனு) இருப்பது.  சாமவேதம் அவளது முகம், ரிக், யஜுஸ் அவளது ஸ்தனங்கள், அதர்வண வேதம் அவளது ஹார்தகலா.  இவ்வாறு காமகலா பிரம்மத்தின் துரிய நிலையாக இருக்கிறாள்.
சிருஷ்டிக்கு எதிரானதாக லயத்தில் எல்லா தத்துவங்களும் தேவியினுள் அடங்குகின்றன (கபளீக்ருத).  இந்த நிலையில் அவள் பெயரும் உருவமுமற்ற நிஷ்கள சிவமாக இருக்கிறாள்.
சக்தி சங்கம தந்திரம் காமகலை என்னும் முதல் அசைவை பிரணவம் என்கிறது.

ஸ்ரீவித்யா சாதனையை மேற்கொள்ளும் ஒரு சாதகன் காமகலையுடனான தனது ஒருமையை உணர்கிறான்.  முதலில் அவன் யந்திரத்துடனும் மந்திரத்துடனும் தனது ஒருமையை உணர்ந்து முடிவில் லலிதாவுடனான தனது ஒருமை நிலையை உணர்கிறான்.  மகா சக்தியே சித் சக்தி,  பலவாகத் தோன்றுவது அவளது மாயா சக்தி.  இவ்வாறு பரிணாமம் அல்லது உலகமாக இருப்பது சித் ரூபமே.  இவ்வாறு சக்தியும் சக்திமானும் ஒன்றுதான். 


இவ்வாறு சக்தி சாதனை அல்லது ஸ்ரீ சக்ர வழிபாடு என்பது அறிபவர்- ஜீவன், அறிவு- சக்தி மற்றும் ஜீவனின் உடலைக் குறிக்கும் யந்திரம் மற்றும் அறியப்படும் பொருள்- திரிபுரா ஆகிய மூன்றும் ஒன்றே என்பதை உணருவது. 

Wednesday, 10 May 2017

Kamakala vilasam- Introduction

Introduction

Kamakala vilasam is an authoritative text on SriVidya, composed by Punyanandanatha.  It was first published by Kashmir Government in 1918.  Sir John Woodroffe published a commentary by Sri Natanananda natha in 1921. 

The word, Kamakala vilasam means spreading or emanation of the union of Siva and Sakti. God, the ultimate reality, that could be best described in neuter gender is ascribed a father-mother relationship, the non-active aspect being the father and the dynamic aspect being the mother, while explaining the emergence of the universe. Thus, Kamakala vilasa is the evolution of the supreme triangle, the Siva and Sakthi. 

When a person stands in front of a mirror he does not undergo any change but a new person appears in the mirror.  That reflected person is not different from the original but is not identical with him also.  While the image is an appearance the person is a true being.  The unchanging absolute reality, in the beginning, “desired” to become ever-changing. This initial desire or impulse is responsible for the creation of the world.  This is the kama which expanded (vilasam) into the universe. As a first step in this process the “I” became “this”.  The universe is the outcome of the union of the I and this aspects of the Supreme being. Thus, kamakala vilasam represent the expansion of the changeless consciousness or cit and the ever changing power or cit sakthi and maya shakti into the visible universe.  This evolution is presented by a sound symbol, the matra, and a form symbol, the yantra.

Word or sound symbol is used to express a concept.  When we say car the sound symbol produces a concept.  The actual letters, car, has nothing to do with the concept and when the letters are written on a paper, as car, they have nothing to do with the sound produced by the word car.  Similarly, when the concept, God, is to be expressed, a specific sound symbol is given to it. This sound symbol is the mantra.  When the mantra is written on a paper or a metal plate it is the form symbol of the concept, God.  The form symbol is called the yantra.  It is said that the devata is the life principle, the mantra its subtle body and the yantra its gross body.  The anthropomorphic image of the deity used for worship in temples and houses is the grosser body or form symbol of the deity, than the yantra.  From this we understand that the sound form of the deity creates the exact image of the deity and any changes in the sound brings about a corresponding change in the concept of the deity.  Hence, caution must be exercised while creating the sound symbol and the form symbol as in some situations it may even do great harm to the creator.

In Kamakala vilasam the deity worshiped is Lalitha or Tripurasundari.  Her mantra is the 15 lettered pancha dasakshari and her yantra is the Sricakra.  Readers are hereby warned that the details given in this blog are to be taken only as a reference.  The method of worship should be learned only through an initiation from a guru who has had siddhi of the method.  

காமகலா விலாசம் என்பது ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தின் ஒரு முக்கியமான நூல்.  இதை இயற்றியவர் புண்யானந்தநாதர் என்பவர்.  இந்த நூல் முதலில் 1918 ஆம் வருடம் காஷ்மீர அரசால் வெளியிடப்பட்டது.  1921 ல் சர் ஜான் உட்ராப் என்பவர் ஸ்ரீ நடனானந்த நாதர் என்பவரது விளக்கவுரையைப் பதிப்பித்தார்.

காமகலா விலாசம் என்ற நூல் சிவசக்திகளின் ஐக்கியத்தால் பிரபஞ்சம் வெளிப்படுவதை விளக்குகிறது.  பால்வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை சிருஷ்டியை விளக்கும் சமயத்தில் ஆண்-பெண் அல்லது தந்தை-தாய் என்று குறிப்பிடுவது வழக்கம்.  இதில் தந்தை எனப்படுவது செயலற்ற நிலை, தாய் என்பது செயல்பாடு நிலை. 

கண்ணாடியின் முன் ஒருவர் நிற்கும்போது அங்கு ஒரு உருவம் தோன்றுகிறது.  இதற்காக அந்த மனிதர் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை.  அதேபோல் கண்ணாடியில் தோன்றும் உருவம் அந்த உண்மையான மனிதரின் உருவம்தான் ஆனால் அது அவர் அல்ல.  ஆதியில் உருவமற்று மாற்றமற்று இருந்த பரம்பொருள் பலவாக ஆவேன் என்று விரும்பியது.  இந்த விருப்பம் அல்லது இச்சை காமம் எனப்படுகிறது.  இந்த காமம் வெளிப்பட்டபோது ஏற்பட்ட முதல் படி “நான்” “அது” என்ற இருமை நிலைகள்.  இவ்வாறு மாற்றமற்ற உணர்வு, சித் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதான சக்தியாகியது (சித் சக்தி மற்றும் மாயா சக்தி).  இவ்வாறு வெளிப்பட்ட இறைமை என்ற கருத்தை ஒரு உருவ வடிவமாகவோ சப்த வடிவமாகவோ குறிக்கலாம்.  உருவ வடிவம் யந்த்ரம் என்றும் சப்த வடிவம் மந்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒரு சப்தக் குறியீட்டாலோ ஒரு உருவக் குறியீட்டாலோ குறிப்பிடப்படும் ஒரு கருத்து அந்த குறிகளிலிருந்து வேறுபட்டது.  உதாரணமாக நாம் பூ என்ற சொல்லைக் கூறினால் அதனால் ஒரு கருத்து குறிக்கப்படுகிறது. பூ என்ற சத்தம் அந்தப் பொருளல்ல.  அதே போல் பூ என்று ஒரு தாளில் எழுதினோமானால் அந்த எழுத்துக்கள் அந்தப் பூ அல்ல, அந்த சப்தம் அல்ல.  ஒரு குறிமட்டுமே.  இவ்வாறே ஒரு தேவதையைக் குறிக்கும் ஒரு மந்திரமும் யந்த்ரமும் ஒரு கருத்தைக் குறிக்கின்றன.  அவையே அந்த தேவதையல்ல.  ஆனால் அந்த சப்தத்திலோ உருவத்திலோ ஒரு மாற்றம் ஏற்பட்டால் அவை குறிக்கும் தேவதை என்ற கருத்தும் மாறிவிடுகிறது.  சில சமயம் அது விபரீத விளைவுகளையும் தோற்றுவிக்கிறது.  அதனால் இங்கு குறிப்பிடப்படும் வழிபாடு முறைகளை ஒருவர் ஒரு சித்திபெற்ற குருவிடமிருந்து கற்றுக்கொண்டே முயல வேண்டும்.


காமகலா விலாசம் குறிப்பிடும் தேவதை லலிதா அல்லது திரிபுர சுந்தரி.  அவளது மந்திரம் பதினைந்து எழுத்துக்களைக் கொண்ட பஞ்சதசி மந்திரம். அவளது யந்த்ரம் ஸ்ரீ சக்கரம்.  இவற்றைப் பற்றிய விவரங்களை மேலும் பார்க்கலாம்.

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.