Friday, 12 May 2017

1. May the Lord protect you

Kamakala vilasam
Sri Punyananda natha

Verse 1

Sakala bhuvana udaya sthithi laya maya leelaavinodana udyuktah
Antarleena vimarshah paatu mahesha prakaasa maatra tanuh

Commentary:

“May the Lord, who is ever wakeful during the wonderful play of creation, sustenance and dissolution of all the worlds which issue from him, protect you.  He is the effulgence (prakasa).  Merged in him is the awareness (vimarsa).”

The Lord’s five acts, creation, sustenance, dissolution, concealment and bestowal of grace are called pancha kriya.  They are his divine play as they are not done for a particular benefit (prayojanam). The worlds are called bhuvana as they emerge from him (bhavat yasmaat iti bhuvanam).  Thus, the bhuvana represent all the principles from Siva to bhumi and thus represent Brahman. Hence the Brahman is both, the material as well as willing cause of the universes.

Prakasha and vimarsa are the two states of the Lord the former being sat or existence and the latter the chith or awareness.  Prakasa is the inactive Siva principle while vimarsha is the active Sakthi principle. Awareness is both within (antharmukha) as well as towards outside (bahirmukha).  It is the light of consciousness or the recognition of the state of “that” or idam.  When it is inward is called paripurna ahantha or perfect, I-sense.

The Divine is called Mahesa or great lord as he is not limited by space or time and also because he has the power to control all (Isa). 

During Srividya upasana the Devata, Guru and Mantra are all contemplated at the bindu.  This verse praises all the three.  The term mantra means that which protects the one who thinks it.  Thus mantra has the power of illumination. Guru is also the prakasa as he confers jnana to the aspirant.

சகல புவன உதய ஸ்திதி லய மாயா லீலா விநோதன உத்யுக்த
அந்தர்லீன விமர்ச பாது மகேச பிரகாச மாத்ர தனு  (1)

எல்லா உலகங்களையும் தனது வினோத மாயையால் தன்னிடமிருந்து படைத்து, காத்து அழிக்கும் விளையாட்டை விளையாடும், எப்போதும் விழிப்புடன் இருக்கும் இறைவன் உம்மைக் காக்கட்டும்.  அவர் சோதி வடிவமானவர் (பிரகாசம்), அவரிடம் கலந்திருப்பது உணர்வு (விமர்சம், சக்தி).

இறைவனின் ஐந்து செயல்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பவை பஞ்சகிரியா எனப்படுகின்றன.  இவையனைத்தும் அவரது லீலை அல்லது விளையாட்டு ஏனெனில் அவை எவ்வித பிரயோசனத்தையும் எதிர்பார்த்துச் செய்யப்படுவதில்லை.  இறைவனிடமிருந்து தோன்றுவதால் உலகம், புவனம் எனப்படுகிறது (பவத் யஸ்மாத் இதி புவனம்).  இவ்வாறு, பிரம்மம் குறிக்கும் எல்லா தத்துவங்களையும் (சிவம் முதல் பூமி வரை) உள்ளடக்கியதே புவனம். அது பிரம்மமன்றி வேறில்லை.  பிரம்மமே உலகின் உபாதான காரணமாகவும் (கச்சாப் பொருள்) நிமித்த காரணமாகவும் (இச்சை சங்கல்பம்) இருக்கிறது.

பிரகாசம் விமர்சம் என்பது இறைவனின் இரு நிலைகளைக் குறிக்கின்றது.  பிரகாசம் என்பது சத் அல்லது இருப்பு, விமர்சம் என்பது உணர்வு அல்லது சித்.  இவ்வாறு பிரகாசம் என்பது சிவமாகவும் விமர்சம் என்பது செயல்பாடான சக்தியாகவும் இருக்கின்றன.  இந்த உணர்வு என்பது உள்நோக்கியதாகவோ (அந்தர்முகம்) வெளி நோக்கியதாகவோ (பஹிர்முகம்) இருக்கலாம்.  வெளி நோக்கி இருக்கும்போது “இதம்” அல்லது “இது” என்று அது உலகை அறிகிறது. உள்நோக்கியிருக்கும்போது அது தன்னை அறிகிறது.  அப்போது அது பரிபூரண அகந்தா அல்லது தான் என்னும் உணர்வு எனப்படுகிறது.

இப்பாடலில் இறைவன் மகேசன் என்று அழைக்கப்படுகிறார்.  அவர் காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படுத்தப்படாதவர் என்பதையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய சக்தியைப் பெற்றவர் என்பதையும் இது குறிக்கிறது. 


ஸ்ரீவித்யா உபாசனையின்போது தேவதா, குரு, மந்திரம் ஆகிய மூன்றும் பிந்துவில் தியானிக்கப்படுகின்றன.  இவ்வாறு தேவதையைத் தவிர குருவும் மந்திரமும் பிரகாச விமர்சங்களாக இருக்கின்றனர்.  மந்திரம் என்றால் தன்னை நிலைப்பவரைக் காப்பது என்று பொருள்.  குருவும் பிரகாசம் ஏனென்றால் அவர் ஞானத்தை வழங்குகிறார்.  இவ்வாறு புண்யானந்தர் தேவதா, குரு மற்றும் மந்த்ரம் என்ற மூன்றையும் இப்பாடலில் துதிக்கிறார்.

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.